Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை டீமுக்கு சவால் விடும் ஹைதராபாத்.. செம ஆட்டம் இருக்கு!

சென்னை அணி எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் பல கோல் வாய்ப்புகளை அந்த அணி வீரர்கள் கோட்டை விட்டுள்ளனர்.

கடைசி இரு போட்டிகளில் சென்னை அணி ஆடிய ஆட்டம் சிறப்பாக இருந்தது மட்டுமே அந்த அணிக்கு தற்போது நம்பிக்கை அளிக்கும் விஷயமாக உள்ளது.

ஹைதராபாத் அணி இந்த சீசனை வெற்றிகளுடன் துவக்கியது. ஆனால், கடந்த மூன்று போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்து அந்த அணி சோகத்தில் உள்ளது.

ISL 2020-21 : Chennaiyin FC vs Hyderabad FC match preview

இந்த இரண்டு அணிகளுமே எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு ஹைதராபாத் அணியை இரண்டு லீக் போட்டிகளிலும் வீழ்த்தி இருந்தது சென்னையின் எஃப்சி. ஆனால், இந்த முறை அப்படி எளிதாக அந்த அணியை சென்னை அணியால் வீழ்த்தி விட முடியாது.

சென்னை அணியில் முக்கிய வீரர் கிரிவெல்லாரோ இந்த லீக் போட்டியில் ஆட மாட்டார். இந்த நிலையில், ஹைதராபாத் அணி அரிடேன் சான்டானாவின் வேகத்தை பயன்படுத்தி கோல்கள் அடிக்க முயற்சி செய்யும். அதை வைத்து பார்க்கும் போது இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெல்லவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

சென்னை அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் இந்த சீசனில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும். புள்ளிப் பட்டியலில் எட்டாம் இடத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

Story first published: Monday, January 4, 2021, 17:51 [IST]
Other articles published on Jan 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+