For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர் அடித்த முதல் கோல்.. ஐஎஸ்எல் தொடரில் கலக்கிய அனிருத்.. ஜாம்ஷெட்பூரை வீழ்த்திய சென்னை!

கோவா : 2020-21 ஐஎஸ்எல் சீசனின் ஐந்தாவது லீக் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் அனிருத் தாப்பா முதல் கோல் அடித்தார். இதன் மூலம் நடப்பு சீசனில் முதல் கோல் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ISL 2020-21 : Chennaiyin FC vs Jamshedpur FC 5th match result

அதுவும் அவர் அடித்த கோல் தான் ஐஎஸ்எல் சீசனில் அடிக்கப்பட்ட மிக விரைவான கோல். போட்டி துவங்கிய 52வது வினாடியில் கோல் அடித்து தெறிக்க விட்டார்.

சென்னையின் எஃப்சி அணி இந்த சீசனை தன் முதல் நிமிடத்துக்குள் கோல் அடித்து துவங்கியது. அடுத்து கான்கேல்வ்ஸ் பெனால்ட்டியை கோலாக மாற்றினார்.

போட்டியில் பெரும்பாலும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணியின் நெரிஜுஸ் வால்ஸ்கிஸ் முதல் கோலை அடித்தார்.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஜாம்ஷெட்பூர் போட்டி முழுவதும் பல கோல் வாய்ப்புகளை வீணடித்தது. கடைசி 20 நிமிடங்களில் சென்னை அணிக்கு சில கோல் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

ஆட்ட நேர முடிவில் 2 - 1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணி, ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தியது. கடந்த சீசனில் சென்னை அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற பயிற்சியாளர் கோயல் தற்போது, ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளராக இருக்கும் நிலையில் அந்த அணி முதல் போட்டியிலேயே அவரது முன்னால் அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.

Story first published: Wednesday, November 25, 2020, 10:23 [IST]
Other articles published on Nov 25, 2020
English summary
ISL 2020-21 : Chennaiyin FC vs Jamshedpur FC 5th match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+