Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்பர் 1 டீமை வீழ்த்துமா சென்னை? வாய்ப்பே இல்லை.. அடித்து சொல்லும் விமர்சகர்கள்!

கோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த லீக் சுற்றில் இன்றைய ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோத உள்ளன.

இந்த சீசனில் நம்பர் 1 அணியாக வலம் வரும் மும்பை சிட்டி அணியை சென்னையின் எஃப்சி அணி வீழ்த்துமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

ISL 2020-21 : Chennaiyin FC vs Mumbai City FC match preview

சென்னையின் எஃப்சி அணிக்கு இந்த சீசன் சராசரியாக அமைந்துள்ளது. இதுவரை ஆடிய 13 போட்டிகளில் சென்னையின் எஃப்சி 3 வெற்றிகள், 6 டிரா, 4 தோல்விகளை சந்தித்துள்ளது.

மும்பை சிட்டி எஃப்சி அணி தன் முதல் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது. அதன் பின் அந்த அணி தோல்வியை சந்திக்கவே இல்லை. சிறந்த பயிற்சியாளரான செர்ஜியோ லொபேராவின் கீழ் அந்த அணி முன்னணி அணியாக மாறி உள்ளது.

இந்த நிலையில், வலுவான அந்த அணியை சென்னையின் எஃப்சி அணியால் வீழ்த்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விமர்சகர்கள் மும்பை சிட்டி தான் இந்தப் போட்டியில் வெல்லும் என கூறி வருகின்றனர்.

ஆனால், இந்த இரு அணிகளும் இதுவரை மோதி உள்ள 13 போட்டிகளில் சென்னையின் எஃப்சி ஆறு வெற்றிகளை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது மும்பை சிட்டி அணி ஐந்து முறை தான் வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Monday, January 25, 2021, 19:46 [IST]
Other articles published on Jan 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+