Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 நிமிடத்தில் 2 கோல்.. முதல் மேட்சிலேயே வாயை பிளக்க வைத்த ஸ்பெயின் வீரர்.. யாருப்பா அது?

கோவா : பெங்களூரு எஃப்சி அணி கஷ்டப்பட்டு போட்ட இரண்டு கோல்களை மூன்றே நிமிடத்தில் சமன் செய்து போட்டியை மாற்றினார் கோவா அணியில் ஆடி வரும் ஸ்பெயின் வீரர் இகோர் அங்குலோ.

கோவா அணியில் கடந்த சீசன்களின் ஹீரோவாக இருந்த பெர்ரான் கொரோமினாஸ்-ஐ நீக்கி விட்டு அணியில் ஸ்ட்ரைக்கராக சேர்க்கப்பட்டவர் தான் இகோர் அங்குலோ.

இவர் எப்படி ஆடுவாரோ என நினைத்த ரசிகர்களை முதல் போட்டியிலேயே வியக்க வைத்தார்.

மூன்றாவது போட்டி

மூன்றாவது போட்டி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முழு தொடரும் கோவாவில் நடைபெற உள்ளது. இதில் இந்த தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் எஃப்சி கோவா - பெங்களூரு எஃப்சி அணிகள் மோதின.

பெங்களூரு ஆதிக்கம்

பெங்களூரு ஆதிக்கம்

இந்தப் போட்டியில் பெங்களூரு அணி முதல் 65 நிமிடங்கள் வரை ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் கிளேய்டன் சில்வா மற்றும் ஜுவானன் ஆளுக்கு ஒரு கோல் அடித்து இருந்தனர். பெங்களூரு அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.

இடது கால்

இடது கால்

அப்போது கோவா அணியை காப்பாற்ற வீறு கொண்டு எழுந்தார் இகோர் அங்குலோ. 66 வது நிமிடத்தில் ஆல்பர்டோ நோகுரா பாஸ் செய்த பந்தை கோலாக மாற்றினார். இடது காலால் அவர் அடித்த பந்தை எதிர்கொள்ள முடியாமல் பெங்களூரு கோல் கீப்பர் குர்ப்ரீத் சிங் கோட்டை விட்டார்.

கட்டுப்படுத்த முடியவில்லை

கட்டுப்படுத்த முடியவில்லை

அடுத்த மூன்று நிமிடங்களில் மீண்டும் அங்குலோ தன் மார்பால் பந்தை அடித்து கோலாக மாற்றினார். கோவா அணி 2 - 2 என போட்டியை சமன் செய்து கடைசி வரை அதை தக்க வைத்தது. பெங்களூரு அணி இரண்டாம் பாதியில் தடுப்பாட்டம் ஆடியும் அந்த அணியால் இகோர் அங்குலோவை கட்டுப்படுத்த முடியவில்லை.

சமன்

சமன்

ஆட்ட நேர முடிவில் 2 - 2 என பெங்களூரு, கோவா இடையே ஆன போட்டி சமன் ஆனது. இந்த சீசனின் முதல் போட்டி சமன் செய்யப்பட்டது. மறுபுறம் பெர்ரான் கொரோமினாஸ்-இன் இடத்தை நிரப்ப இகோர் சரியான வீரர் என நிரூபித்துள்ளார்.

Story first published: Monday, November 23, 2020, 10:15 [IST]
Other articles published on Nov 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+