Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன்பா சென்னை.. இந்த மேட்ச்சாவது ஜெயிப்பீங்களா? கோவாவை சந்திக்கும் சென்னை அணி!

கோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் எஃப்சி கோவா - சென்னையின் எஃப்சி அணிகள் மோத உள்ளன.

சென்னையின் எஃப்சி அணி இந்த சீசனில் முதல் போட்டியை வென்று அசத்தல் துவக்கம் பெற்றது. ஆனால், அதன் பின் ஒரு வெற்றி கூட பெறவில்லை. பெங்களூரு எஃப்சி மற்றும் மும்பை சிட்டி அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்து இருந்தது.

கேரளா பிளாஸ்டர்ஸ், நார்த் ஈஸ்ட் அணிகளுக்கு எதிராக டிரா செய்து இருந்தது.

ISL 2020-21 : FC Goa vs Chennaiyin FC match preview

மறுபுறம் கோவா அணி, இரண்டு டிரா, ஒரு தோல்வி, இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது., கடைசி இரு போட்டிகளில் வென்றதால் அந்த அணி நம்பிக்கையுடன் உள்ளது. சென்னை அணியை வீழ்த்தினால் அந்த அணி முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறும்.

கோவா அணி நல்ல பார்மில் உள்ளது. அந்த அணி டிரா செய்த போட்டிகளில் கூட நன்றாக ஆடி இருந்தது. சென்னை அணி மிக மோசமான பார்மில் உள்ளது. பல வீரர்கள் காயத்தில் சிக்கி உள்ளனர்.

நுணுக்கம் மற்றும் வியூகம் தான் இந்த இரு அணிகளுக்கு இடையே நடக்க உள்ள மோதலில் வெற்றியை தீர்மானிக்கும். அந்த வகையில் கோவா அணி கை தான் இந்தப் போட்டியில் ஓங்கி இருக்கும் என கருதப்படுகிறது.

சென்னை அணி வெல்வது கடினம் என்றாலும், அந்த அணிக்கு தற்போது உள்ள நிலையில் வெற்றி அவசியம்.

Story first published: Saturday, December 19, 2020, 19:54 [IST]
Other articles published on Dec 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+