Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 கோல்.. கேரளாவை துவம்சம் செய்த கோவா.. பரபர மோதல்!

கோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது எஃப்சி கோவா அணி.

இதுவே இந்த சீசனில் கோவா அணியின் முதல் வெற்றி ஆகும். இந்தப் போட்டியில் கோவா அணியின் இகோர் அங்குலோ 30 மற்றும் 90வது நிமிடத்தில் இரண்டு கோல்கள் அடித்தார்.

ISL 2020-21 : FC Goa vs Kerala Blasters FC 19th match result

52வது நிமிடத்தில் ஜோர்ஜ் ஒர்டிஸ் மென்டோசா ஒரு கோல் அடித்து இருந்தார்.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் வின்சென்ட் கோமெஸ் கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தன் அணிக்கு ஆறுதல் அளித்தார். கேரளா அணி இரண்டாம் பாதி முழுவதும் ஒரு கோல்அடித்து விட மாட்டோமா? என போராடிப் பார்த்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் தான் அந்த அணிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

கோவா அணி இந்த சீசனில் கடந்த முறையைப் போல பந்தை அதிக நேரம் தக்க வைத்து வந்தது. எனினும், கடந்த மூன்று போட்டிகளில் அந்த அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

அதற்கு சேர்த்து வைத்து கேரளா போட்டியில் அந்த அணி 3 கோல் அடித்து மிரட்டி உள்ளது. இந்தப் போட்டியில் கேரளா அணி கோல் அடிக்க முடியாமல் தவித்ததே, கோவா அணி எந்த அளவு ஆதிக்கம் செலுத்தியது என்பதை எடுத்துக் காட்டியது.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தன் மோசமான பயணத்தை இந்த சீசனிலும் தொடர்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Monday, December 7, 2020, 13:30 [IST]
Other articles published on Dec 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+