Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு மேட்ச் கூட ஜெயிக்கலை.. இரண்டு டீமுக்கும் அதே நிலை.. கோவா vs கேரளா பிளாஸ்டர்ஸ்!

கோவா : இந்தியன் சூப்பர் லீக் தொடரின் ஏழாவது சீசனில் கோவா - கேரளா பிளாஸ்டர்ஸ் இடையே ஆன லீக் போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளில் ஒரு அணியாவது வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காரணம், இரண்டு அணிகளுமே இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இரு அணிகளும் மூன்று லீக் போட்டிகளில் ஆடி உள்ளன.

ISL 2020-21 : FC Goa vs Kerala Blasters FC match preview

கோவா அணி கடந்த சீசனில் நல்ல பார்மில் இருந்தது. பல அணிகளையும் அச்சுறுத்தி வந்தது. அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.

ஆனால், இந்த சீசனில் கோவா அணியும் தடுமாறி வருகிறது. கோவா அணி இந்த சீசனில் மற்ற அணிகளைக் காட்டிலும் அதிக நேரம் பந்தை தன் வசம் வைத்து சாதனை படைத்துள்ளது. ஆனால், அது எதுவும் கோலாக மாறவில்லை என்பது தான் மோசமானது.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இதுவரை ஆடிய போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி உள்ளது. எனினும், வெற்றி கிடைக்கவில்லை. இரண்டு அணிகளுமே வெற்றி பெறக் கூடிய அணிகள் தான்.

இந்த நிலையில், இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டி சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் போட்டியில் ஒரு அணி வெற்றி பெற்றால் அந்த அணியின் நிலை மாறும் என்பதால் ரசிகர்கள் இந்தப் போட்டியை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

இரண்டு அணிகளும் இரண்டு புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 6, 2020, 19:50 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+