Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயிச்சுட்டோம்னு மட்டும் நினைச்சுறாதீங்க.. ஹைதராபாத்துக்கு ஷாக் தந்த ஜாம்ஷெட்பூர்.. பரபர மோதல்!

கோவா : 2020-21 ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் - ஹைதராபாத் அணிகள் இடையே ஆன கால்பந்து போட்டி சமனில் முடிந்தது.

ஹைதராபாத் அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்திய போதும் கடைசி சில நிமிடங்களில் அந்த அணி கோட்டை விட்டது.

வாய்ப்பை பயன்படுத்திய ஜாம்ஷெட்பூர் அணி 85வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தது. ஹைதராபாத் அணி இதுவரை இந்த சீசனில் தோல்வி அடையவில்லை. ஆனால், ஜாம்ஷெட்பூர் அணி இன்னும் தன் முதல் வெற்றியை பதிவு செய்யவில்லை.

ISL 2020-21 : Hyderabad FC vs Jamshedpur FC match result

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் கை கொடுத்தார் அரிடேன் சான்டானா. அவர் 55 வது நிமிடத்தில் அசத்தல் கோல் அடித்தார்.

85வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஸ்டீபன் ஈசே கோல் அடித்து 1 - 1 என்ற கணக்கில் போட்டியை சமன் செய்தார்.

அதனால், கடைசி நிமிடங்களில் பரபரப்பு எழுந்தது. ஹைதராபாத் அணி மீண்டும் ஒரு கோல் அடித்து வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், இரு அணிகளாலும் அதன் பின் கோல் அடிக்க முடியவில்லை.

முதல் கோலை அடித்த உடன் ஹைதரபாத் அணி வெற்றி பெற்று விடலாம் என நினைத்தது. அப்போது போட்டியில் 35 நிமிடம் மட்டுமே மீதமிருந்தது. ஆனால், ஜாம்ஷெட்பூர் போராடி அதை உடைத்தது.

ஹைதராபாத் எஃப்சி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே ஆன போட்டி 1 - 1 என்ற கணக்கில் சமன் ஆனது.

Story first published: Thursday, December 3, 2020, 15:56 [IST]
Other articles published on Dec 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+