Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயிக்க முடியாம போச்சே.. ஏமாந்த ஹைதராபாத்.. போராடி டிரா செய்த ஒடிசா!

கோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் ஹைதராபாத் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் இடையே ஆன போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் ஹளிச்சரண் நர்ஜாரி 13வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.

ISL 2020-21 : Hyderabad FC vs Odisha FC match result

அடுத்து ஒடிசா அணி கோல் அடிக்க போராடியது. முதல் பாதி முழுவதும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

இரண்டாம் பாதியில் 51வது நிமிடத்தில் கோல் அலெக்சாண்டர் கோல் அடித்து ஒடிசா அணியை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

அதன் பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் 1 - 1 என போட்டி டிராவில் முடிந்தது.

இந்த டிரா மூலம் ஹைதராபாத் அணி ஏமாற்றம் அடைந்தது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஒடிசா அணியை வீழ்த்த முடியாமல் போனது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

எனினும், இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் தங்கள் இடங்களை தக்க வைத்துக் கொண்டன.

ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் 17 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் நீடிக்கிறது. அந்த அணி அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிகளை பெறாவிட்டால் நான்காம் இடத்தை இழந்து பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும். ஒடிசா எஃப்சி அணி 7 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Story first published: Wednesday, January 20, 2021, 13:36 [IST]
Other articles published on Jan 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+