Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

39 வினாடிகளில் 2 கோல்.. அதிர வைத்த ஹைதராபாத் வீரர்.. ஈஸ்ட் பெங்கால் பரிதாபம்!

கோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் தொடரின் லீக் சுற்றில் ஹைதராபாத் அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி தன் முதல் ஐஎஸ்எல் கோலை அடித்தது. இரண்டு கோல் அடித்த நிலையிலும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.

ISL 2020-21 : Hyderabad FC vs SC East Bengal 29th match result

ஹைதராபாத் அணி வீரர் அரிடேன் சான்டானா இரண்டு கோல் அடித்தார். அதுவும் அவர் 39 வினாடிகளில் இரண்டு கோல் அடித்து மிரள வைத்தார். அதுவே போட்டியின் திருப்புமுனை தருணமாகவும் அமைந்தது.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. பல முறை கோல் அடிக்கும் வாய்ப்பை உருவாக்கினாலும், எதுவும் கோலாக மாறவில்லை.

எனினும், போட்டியின் முதல் கோலை அடித்தது ஈஸ்ட் பெங்கால் தான். அந்த அணியின் ஹல்லிச்சரண் நர்ஜாரி 26வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.

இதுவே ஈஸ்ட் பெங்கால் அணி அடித்த முதல் ஐஎஸ்எல் கோல். கடந்த நான்கு போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இந்த நிலையில், முதல் கோலை அடித்து அந்த அணி உற்சாகத்தில் மிதந்தது.

அடுத்து இரண்டாம் பாதியில் 56வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் அரிடேன் சான்டானா தன் அணியின் முதல் கோலை அடித்தார். அடுத்த 39 வினாடிகளில் அடுத்த கோலை அடித்து தெறிக்க விட்டார் அவர்.

68வது நிமிடத்தில் ஹைதராபாத் அணி தன், மூன்றாவது கோலையும் அடித்தது. 81வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் நர்ஜாரி மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

ஆட்ட நேர இறுதியில் 3 - 2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது ஹைதராபாத் அணி.

Story first published: Wednesday, December 16, 2020, 10:46 [IST]
Other articles published on Dec 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+