Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவ்வளவு ஈஸியா விட்ற மாட்டோம்.. கோவாவுக்கு சவால் விடுக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்!

கோவா : கேரளா பிளாஸ்டர்ஸ் - எஃப்சி கோவா அணிகள் இடையே ஆன ஐஎஸ்எல் லீக் போட்டி கோவாவில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மீது அனைவரின் கவனமும் உள்ளது. அந்த அணி கடந்த மூன்று போட்டிகளில் தோல்வியை தவிர்த்து இருக்கிறது.

ISL 2020-21 : Kerala Blasters FC vs FC Goa preview

ஜாம்ஷெட்பூர் மற்றும் பெங்களூரு அணிகளை வீழ்த்தி இருக்கிறது கேரளா பிளாஸ்டர்ஸ். முதல் பாதியில் கேரளா மோசமாக ஆடிய நிலையில், இந்த வெற்றிகள் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களை கொண்டு கேரளா அணி வெற்றி பெற்று வருகிறது.

கோவா அணி தற்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கடந்த ஐந்து போட்டிகளில் அந்த அணி தோல்வி அடையாமல் ஆடி வருகிறது. கேரளா அணி முதல் நான்கு இடங்களை பிடிப்பது கடினம் என்றாலும், கோவா அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளிக்குமா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோவா அணியில் பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர். களத்திலும், வீரர்கள் பட்டியலில் கேரளாவை விட கோவா வலுவாக உள்ளது. ஆனாலும், கேரளா அணி நல்ல பார்மில் இருப்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

விமர்சகர்கள் கோவா அணி தான் வெல்லும் என கூறி உள்ளனர். ஆனாலும், கேரளா அணி 1 - 2 என்ற அளவிற்காவது போட்டியை எடுத்துச் செல்லும் என அவர்கள் கணித்துள்ளனர்.

Story first published: Saturday, January 23, 2021, 21:40 [IST]
Other articles published on Jan 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+