Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு மேட்ச் கூட ஜெயிக்காத ஒரே டீம்.. கேரளா அணிக்கு காத்திருக்கும் ஈஸி வெற்றி!

கோவா : 2020-21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஒடிசா எஃப்சி அணிகள் மோத உள்ளன.

இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத அணியாக வலம் வருகிறது ஒடிசா அணி. அந்த அணியின் பரிதாப நிலை, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராகவாவது மாறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே நிலவுகிறது.

ISL 2020-21 : Kerala Blasters FC vs Odisha FC match preview

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் பெரிய அளவில் வெற்றிகளை குவிக்கவில்லை. அந்த அணி எட்டு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. மூன்று டிரா மற்றும் நான்கு தோல்விகளுடன் மோசமாகவே காட்சி அளிக்கிறது கேரளா.

ஒடிசா அணி எட்டு போட்டிகளில் ஆடி உள்ளது. அதில் ஆறு தோல்விகளை சந்தித்துள்ளது. இரண்டு போட்டிகளை டிரா செய்துள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது அந்த அணி.

தன் கடைசி போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியிடம் 3 - 1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து இருந்தது ஒடிசா அணி. ஈஸ்ட் பெங்கால் அணியும் வெற்றியே பெறாமல் தவித்து வந்த நிலையில், அந்த அணியை வெற்றி பெற வைத்து இருந்தது ஒடிசா.

இந்த நிலையில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக ஒடிசா வெற்றி பெறுமா? நிச்சயம் இல்லை என்றே கூறுகிறார்கள் விமர்சகர்கள். கேரளா அணி மோசமாக ஆடினாலும், நல்ல வீரர்கள் உள்ளனர். அதனால், அந்த அணியே இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, January 7, 2021, 18:52 [IST]
Other articles published on Jan 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+