Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2020-21 : கேரளா பிளாஸ்டர்ஸ் vs ஏடிகே மோகன் பகான்.. ஐஎஸ்எல் முதல் மேட்ச்.. தெறிக்கவிடும் மோதல்!

கோவா : இந்தியன் சூப்பர் லீக் ஏழாவது சீசன் துவங்க உள்ளது. முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஏடிகே மோகன் பகான் அணிகள் மோத உள்ளன.

கொல்கத்தாவை மையமாக கொண்ட ஏடிகே அணி, இந்த சீசனில் பழமை வாய்ந்தா மோகன் பகான் கால்பந்து கிளப் அணியுடன் இணைந்து தன் முதல் ஐஎஸ்எல் சீசனை சந்திக்க உள்ளது.

அதனால் ஏடிகே மோகன் பகான் அணி மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த இரண்டு கிளப் அணிகளின் ரசிகர்களும் ஒன்றிணைய உள்ளதால் அந்த அணி அதிக ரசிகர்கள் கொண்ட அணியாக மாறி உள்ளது.

ISL 2020-21 : Kerala Blasters vs ATK Mohun Bagan 1st match preview

மேலும், கடந்த சீசனில் கோப்பை வென்ற அணி என்பதாலும் ஏடிகே அணியின் முதல் போட்டியிலேயே எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

மறுபுறம் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி நிலையான ரசிகர்களை கொண்டு இருந்தாலும் கடந்த சீசன்களில் தொடர்ந்து தோல்வி அடைந்தது. 2019-20 சீசனில் அந்த அணி புள்ளிப் பட்டியலில் கீழே தான் இடம் பிடித்தது.

இந்த இரண்டு அணிகளும் புதிய வீரர்களுடன் 2020-21 சீசனை எதிர்கொள்ள உள்ளன. முதல் போட்டியிலேயே கேரளா அணி பல புதிய வீரர்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சீசன்களின் மோசமான தோல்விகளால் எழுந்த விமர்சனத்தை முதல் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் கேரளா அணியால் உடைக்க முடியும். அது இந்த சீசனையே அந்த அணிக்கு மாற்றி அமைக்கும். அதே சமயம், ஏடிகே அணி மோகன் பகான் எனும் பாரம்பரிய பெயரை சுமந்து ஆட உள்ளதால் அத்தனை எளிதில் விட்டுக் கொடுக்காது.

Story first published: Friday, November 20, 2020, 17:00 [IST]
Other articles published on Nov 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+