For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

வேடிக்கை பார்த்த சென்னை வீரர்கள்.. போட்டுத் தாக்கிய மும்பை.. தொடர் வெற்றி!

கோவா : ஏழாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் சென்னையின் எஃப்சி அணியை போராடி வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி.

இரண்டு அணிகளும் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு சுவாரசியமாக அமைந்தது.

ISL 2020-21 : Mumbai City FC vs Chennaiyin FC 21st match result

இந்தப் போட்டியின் முதல் பாதியில் சென்னை அணி பெரும் ஆதிக்கம் செலுத்தியது. மும்பை சிட்டி அணி முதல் பாதியில் மிகச் சில சந்தர்ப்பத்தில் மட்டுமே பந்தை கைப்பற்றியது.

40வது நிமிடத்தில் சென்னை அணியின் ச்சாங்க்டே போட்டியின் முதல் கோலை அடித்தார். மும்பை அணி இதற்கு அடுத்த சில நிமிடங்களில் பதிலடி கொடுத்தது. ஹெர்னான் சான்டானா கார்னரில் இருந்து அசத்தலாக கோல் அடித்தார்.

இரண்டாம் பாதியில் 70வது நிமிடத்தில் மும்பை சிட்டி அணி தன் இரண்டாவது கோலை அடித்தது. இந்த கோலின் போது சென்னை அணி வீரர்கள் பந்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது பெரிய தவறாக அமைந்தது.

அதன் பின் சென்னை அணியால் கோல் அடிக்க முடியவில்லை. போட்டி 2 - 1 என்ற அளவில் முடிவுக்கு வந்தது. மும்பை சிட்டி அணி தொடர்ந்து நான்காவது போட்டியில் வெற்றி பெற்று பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மும்பை அணி தான் ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி எட்டாவது இடத்தில் உள்ளது.

Story first published: Thursday, December 10, 2020, 9:40 [IST]
Other articles published on Dec 10, 2020
English summary
ISL 2020-21 : Mumbai City FC vs Chennaiyin FC 21st match result
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X