Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப்பாவமே.. செமயாக அடி வாங்கப் போகும் கேரளா.. கதிகலங்க வைக்கும் மும்பை சிட்டி!

கோவா : கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மோசமான நிலையில் இருப்பதால், அந்த அணிக்கு எதிராக மோத உள்ள மும்பை சிட்டி அணி எத்தனை கோல் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றே ரசிகர்கள் கணக்கு போட்டு வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்று இரு நாட்கள் இடைவெளிக்கு பின் ஜனவரி 2 அன்று நடைபெற உள்ளது.

ISL 2020-21 : Mumbai City FC vs Kerala Blasters FC match preview

இரு நாட்கள் கழித்து மும்பை சிட்டி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இடையே ஆன லீக் போட்டி நடைபெற உள்ளது.

மும்பை சிட்டி அணி தன் முதல் ஏழு போட்டிகளில் மிகவும் சிறப்பாக ஆடி உள்ளது. இதுவரை ஐந்து வெற்றிகளை குவித்துள்ளது மும்பை சிட்டி அணி. புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

எட்டு போட்டிகள் ஆடி 17 புள்ளிகளுடன் ஏடிகே மோகன் பகான் அணி முதல் இடத்தில் உள்ள நிலையில், தன் எட்டாவது போட்டியின் முடிவில் மும்பை சிட்டி அணி முதல் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

மும்பை அணி இதுவரை 11 கோல்கள் அடித்து வெறும் 3 கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது. இந்த சீசனில் அதிக கோல் வித்தியாசம் வைத்துள்ள அணியாக வலம் வருகிறது.

இந்த நிலையில் தன் முதல் ஏழு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக மும்பை சிட்டி அணி கோல் விட்டுக் கொடுக்காமல் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் தான் உள்ளது. இந்த சீசன் அந்த அணிக்கு படுமோசமாக இருப்பதால் மும்பை சிட்டி அணிக்கு எதிராக வெற்றி பெறுவது கடினம் என்றே கருதப்படுகிறது.

Story first published: Thursday, December 31, 2020, 14:51 [IST]
Other articles published on Dec 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+