Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

11 நிமிடம் தான்.. அதற்குள் 2 கோல்.. கேரளா கதையை முடித்த மும்பை சிட்டி!!

கோவா : மும்பை சிட்டி எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் இடையே ஆன லீக் போட்டியில் மும்பை அணி அசத்தலாக வெற்றி பெற்றது.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி துவக்கம் முதலே சொதப்பலாக ஆடி போட்டியில் மோசமாக தோல்வி அடைந்தது.

ISL 2020-21 : Mumbai City FC vs Kerala Blasters FC match result

கேரளா அணி மூன்றாவது நிமிடத்திலேயே முதல் கோலை விட்டுக் கொடுத்தது. மும்பை சிட்டி அணியின் ஆடம் லே ஃபோன்ரே முதல் கோலை அடித்தார்.

அடுத்து 11வது நிமிடத்தில் மும்பை அணியின் ஹ்யூகோ போமஸ் இரண்டாவது கோலை அடித்தார். அதன் பின் மும்பை சிட்டி அணி, கேரளா அணியை கோல் அடிக்கவிடாமல் பார்த்துக் கொண்டது.

கடைசி 20 நிமிடங்கள் மீதமிருக்கும் போது மும்பை அணிக்கு மீண்டும் ஒரு கோல் வாய்ப்பு கிடைத்தது. எனினும், அதில் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்ட நேர முடிவில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே கேரளா அணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் செய்து மும்பை சிட்டி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் வெற்றியை அடுத்து மும்பை சிட்டி எஃப்சி அணி எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளை பெற்று, 19 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஏடிகே ,மோகன் பகான் அணி எட்டு போட்டிகளில் ஐந்து வெற்றி மற்றும் 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

படுதோல்வி அடைந்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தொடர்ந்து 6 புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தில் நீடித்து வருகிறது. கிட்டத்தட்ட பாதி சீசன் முடிவடைந்த நிலையில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி முதல் நான்கு இடத்தை பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என்றே கூறப்படுகிறது.

Story first published: Sunday, January 3, 2021, 11:59 [IST]
Other articles published on Jan 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+