Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்பர் 1 மும்பையை வீழ்த்துமா நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்? பரபர மோதல்!

கோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி எஃப்சி - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிகள் இடையே ஆன லீக் போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் மும்பை சிட்டி அணி வெல்லும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த அணி ஆடிய 13 போட்டிகளில் ஒரு தோல்வி மட்டுமே அடைந்துள்ளது. 9 போட்டிகளில் வெற்றி பெற்று நம்பர் 1 அணியாக வலம் வருகிறது.

ISL 2020-21 : Mumbai City FC vs North East United FC match preview 30-01-2021

இந்த சீசனின் முதல் போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்த அந்த அணி, தொடர்ந்து 12 போட்டிகளில் தோல்வியடையாமல் ஆடி வருகிறது.

நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி டிரா அல்லது வெற்றி பெற்றால் 13 போட்டிகளில் டோல்வியைடாமல் ஆடி ஐஎஸ்எல் வரலாற்றில் புதிய சாதனை படைக்கும்.

நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி புள்ளிப் பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த சில போட்டிகளில் அந்த அணி ஜாம்ஷெட்பூர் எஃப்சி மற்றும் ஏடிகே மோகன் பகான் உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி நம்பிக்கை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தினால், நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறும்.

இந்த இரு அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் மும்பை சிட்டி அணிதான் வெற்றி பெறும் என விமர்சகர்கள் கூறி உள்ளனர். நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி ஒரு கோல் அடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளனர்.

Story first published: Saturday, January 30, 2021, 18:08 [IST]
Other articles published on Jan 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+