Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் ஏமாற்றிய ஒடிசா.. 2 கோல் அடித்து மும்பை சிட்டி அதிரடி வெற்றி!

கோவா : ஒடிசா எஃப்சி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை சிட்டி அணி அதிரடியாக 2 கோல் அடித்து வெற்றி பெற்றது.

ஒடிசா எஃப்சி அணி இந்த சீசனில் மோசமான நிலையில் தொடர்ந்து வருகிறது.

ISL 2020-21 : Mumbai City FC vs Odisha FC match result

மும்பை சிட்டி அணி இந்தப் போட்டியில் 30வது நிமிடத்தில் பெனால்ட்டி வாய்ப்பு மூலம் முதல் கோலை அடித்தது. அடுத்து 45வது நிமிடத்தில் ரௌலின் போர்ஜஸ் தலையால் பந்தை அடித்து கோல் அடித்தார்.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இந்த வெற்றி மூலம் மும்பை சிட்டி அணி புள்ளிப் பட்டியலில் ஏடிகே மோகன் பகான் அணியுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டு அணிகளும் ஒரே அளவு புள்ளிகளை பெற்றுள்ளன.

ஒடிசா அணி தான் ஆடிய நான்கு போட்டிகளில் மூன்று தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்கு ஒரு இடம் முன்னே உள்ளது. ஒரு புள்ளி கூட பெறாத ஈஸ்ட் பெங்கால் அணி கடைசி இடத்தில் இருக்கிறது.

மும்பை அணி இந்தப் போட்டியில் நீண்ட நேரம் பந்தை தன் வசம் வைத்து இருந்தது. வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். முதல் பாதியில் 62 சதவீதம் பந்தை தன் வசம் வைத்து இருந்தது மும்பை அணி.

இரண்டாம் பாதியிலும் அதே அளவு நேரம் பந்தை தன் வசம் தக்க வைத்தது. இந்த வெற்றி மூலம் கடந்த சீசன் போலவே மும்பை அணி தொடரின் துவக்கத்தில் தன் ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கி உள்ளது.

Story first published: Monday, December 7, 2020, 12:00 [IST]
Other articles published on Dec 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+