Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புது டீம்தான்.. அதுக்காக இப்படியா ஆடுவீங்க? மும்பை அணியிடம் சரண்டர் ஆன ஈஸ்ட் பெங்கால்!

கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி எஃப்சி அணி அதிரடியாக 3 கோல்கள் அடித்து எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.

ஈஸ்ட் பெங்கால் அணி தன் இரண்டாவது போட்டியிலும் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறியது.

மும்பை சிட்டி அணி தன் முதல் போட்டியில்வெற்றி பெற்று இருந்தது. ஈஸ்ட் பெங்கால் அணி தன் முதல் போட்டியில் ஏடிகே மோகன் பகான் அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது.

ISL 2020-21 : Mumbai City FC vs SC East Bengal match result

ஈஸ்ட் பெங்கால் அணி இந்த சீசனில் தான் ஐஎஸ்எல் தொடரில் அறிமுகம் ஆகி உள்ளது. மேலும், ஒரு மாதமாக மட்டுமே அந்த அணி தொடருக்கு தயாராகி வந்தது.

இந்த நிலையில் மும்பை அணியை ஈஸ்ட் பெங்கால் அணி வீழ்த்துமா? குறைந்தபட்சம் தன் முதல் ஐஎஸ்எல் கோலை அடிக்குமா? என்ற கேள்விகள் இருந்தன.

ஆனால், போட்டியில் மும்பை அணி முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி அணியின் ஆடம் லே போன்ட்ரே 20 மற்றும் 48வது நிமிடங்களில் கோல்களை அடித்தார். ஹெர்னான் சான்டனா 58வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த மூன்று கோல்களையும் அடிக்க ஹுகோ போமஸ் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நேர முடிவில் மும்பை சிட்டி அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.

புதிய அணி என்றாலும் ஈஸ்ட் பெங்கால் அணி கோல் அடிக்க கிடைத்த சில வாய்ப்புகளையும் தவறவிட்டது. அந்த அணி இனி வரும் போட்டிகளிலும் இதே போலத் தான் ஆடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Wednesday, December 2, 2020, 11:03 [IST]
Other articles published on Dec 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+