For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வசமாக சிக்கிய நார்த் ஈஸ்ட்.. 4 கோல் அடித்து அசர வைத்த ஹைதராபாத்!

கோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணியை 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஹைதராபாத் எஃப்சி.

ஹைதராபாத் அணி பெரிய வெற்றிக்காக காத்திருந்த நிலையில், நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் வசமாக வந்து சிக்கியது.

ISL 2020-21 : North East united FC vs Hyderabad FC match result

நார்த் ஈஸ்ட் அணி துவக்கத்தில் சில வெற்றிகளை பெற்றாலும் கடந்த ஆறு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளது.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி முதல் இரண்டு கோல்களை 3வது நிமிடம் மற்றும் 36வது நிமிடங்களில் அடித்தது. அதற்கு முதல் பாதியின் முடிவில், 45வது நிமிடத்தில் இரண்டு கோல்களை அடித்து சரியான பதிலடி கொடுத்தது நார்த் ஈஸ்ட்.

முதல் பாதியை சமாளித்தாலும் இரண்டாவது பாதியில் நார்த் ஈஸ்ட் அணியால், ஹைதராபாத்தை சமாளிக்க முடியவில்லை.

ஹைதராபாத் அணி கடைசி நிமிடங்களில் துரிதமாக செயல்பட்டு இரண்டு கோல்களை அடித்து தெறிக்க விட்டது. 85வது நிமிடம் மற்றும் 90வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் மாற்று வீரர் லிஸ்டன் கோலாகோ அடுத்தடுத்து கோல்கள் அடித்தார்.

ஆட்ட நேர முடிவில் ஹைதராபாத் அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியை வீழ்த்தி அசத்தியது.

ஹைதராபாத் அணி இந்த அபார வெற்றியின் மூலம் தற்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

Story first published: Saturday, January 9, 2021, 14:44 [IST]
Other articles published on Jan 9, 2021
English summary
ISL 2020-21 : North East united FC vs Hyderabad FC match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+