Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெஸ்ட் கோச்சை தூக்கி வந்த மும்பை.. மாற்றத்தை எதிர்நோக்கி நார்த் ஈஸ்ட்.. பரபர மோதல்!

கோவா : 2020-21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் - மும்பை சிட்டி அணிகள் மோத உள்ளன.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை ஏடிஎகே மோகன் பகான் அணி வீழ்த்தி தொடரை துவக்கி வைத்தது.

ISL 2020-21 : North East United FC vs Mumbai City FC 2nd match preview

அடுத்த போட்டியான நார்த் ஈஸ்ட் - மும்பை மோதலில் மும்பை அணி மீதே அனைவரின் கவனமும் உள்ளது. கடந்த ஆண்டு மும்பை அணி ஐந்தாம் இடம் பிடித்து பிளே-ஆஃப் வாய்ப்பை இலந்ததுய். எனினும், நல்ல அணியை கொண்டு இருந்தது அந்த அணி.

இந்த சீசனில் கோவா அணியின் முன்னாள் பயிற்சியாளர் செர்ஜியோ லோபேராவை திட்டமிட்டு அழைத்து வந்துள்ளது அந்த அணி. மேலும், பல புதிய வீரர்களையும் சேர்த்துள்ளது அந்த அணி.

மறுபுறம் கடந்த கால மோசமான ஆட்டங்களை மாற்றி இந்த சீசனில் பிளே-ஆஃப் செல்ல அந்த அணி முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி இளம் பயிற்சியாளர் ஜெரார்டு நஸ்-ஐ சேர்த்துள்ளது. 19 புதிய வீரர்களையும் அந்த அணி சேர்த்துள்ளது.

நார்த் ஈஸ்ட் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்த தொடரில் நம்பிக்கையுடன் அடுத்த லீக் போட்டிகளை எதிர்கொள்ளும். அதே சமயம், மும்பை அணி புதிய தோற்றத்தில் எப்படி ஆடக் போகிறது? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Story first published: Saturday, November 21, 2020, 16:49 [IST]
Other articles published on Nov 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+