Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீக்கான ஒடிசா.. வச்சு செய்யப் போகும் கோவா.. ஐஎஸ்எல் போட்டியில் என்ன நடக்கும்?

கோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 25வது லீக் போட்டியில் ஒடிசா எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் மோத உள்ளன.

ஒடிசா அணி இதுவரை நான்கு போட்டிகளில் ஆடி ஒரு டிரா செய்து, மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

கடந்த இரண்டு போட்டிகளில் ஏடிகே மோகன் பகான் மற்றும் மும்பை சிட்டி எஃப்சி அணிகளிடம் ஒடிசா தோல்வி அடைந்து இருந்தது.

ISL 2020-21 : Odisha FC vs FC Goa match 25 preview

அந்தப் போட்டிகளில் மட்டும் ஐந்து கோல்களை விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அளித்தது.

இந்த நிலையில், எஃப்சி கோவா அணியை வீழ்த்தி தன் முதல் வெற்றியை பதிவு செய்ய ஆர்வமாக உள்ளது ஒடிசா அணி.

மறுபுறம் எஃப்சி கோவா நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு தோல்விகள், ஒரு டிரா செய்து உள்ளது. புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது அந்த அணி.

கோவா அணி கடந்த சீசன்களை போல ஆதிக்கம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. ஒடிசா அணி பலவீனமாக இருக்கும் நிலையில் அந்த அணிக்கு எதிராக கோவா அதிக கோல்களை அடிக்க முயற்சி செய்யும்.

இந்தப் போட்டியில் ஒடிசா வென்றால் அந்த அணிக்கு அது பெரிய தன்னம்பிக்கை வெற்றியாக இருக்கும். புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் ஒடிசா முன்னேற்றத்தை சந்திக்கும். தோல்வி அடைந்தாலும் அந்த அணி ஒரு கோல் ஆவது அடித்தால் தான் கோல் வித்தியாசத்தை குறைக்க முடியும். தற்போது 4 கோல்கள் குறைவாக அடித்துள்ளது ஒடிசா அணி.

Story first published: Saturday, December 12, 2020, 18:37 [IST]
Other articles published on Dec 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+