For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் 2 மேட்ச் ஜெயிச்ச டீமை சந்திக்கும் ஒடிசா.. தலைஎழுத்தை மாற்றுமா ஹைதராபாத்?

கோவா : 2020 - 21 ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நான்காவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியும், ஒடிசா அணியும் மோத உள்ளன.

கடந்த சீசனில் ஹைதராபாத் அணி படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது.

 Odisha FC vs Hyderabad FC 4th match preview

18 லீக் போட்டிகளில் வெறும் 2 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

ஒடிசா அணி ஏழு வெற்றிகள் பெற்று ஆறாம் இடம் பிடித்தது. நான்கு புள்ளிகளில் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது அந்த அணி.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்டூவர்ட் பாக்ஸ்டர் ஒடிசா அணியை வழிநடத்த உள்ளார். அவர் ஹைதராபாத் அணியை குறைத்து மதிப்பிடவில்லை என கூறி உள்ளார். இந்த சீசனில் ஹைதராபாத் அணி புதிய வடிவில் மாறி உள்ளது.

எனவே, ஒடிசா அணி ஹைதராபாத் அணியை கவனமாக எதிர்கொள்ளும். கடந்த சீசனில் அந்த அணி 31 கோல்களை விட்டுக் கொடுத்தது ஏமாற்றமாக இருந்தது. அதை இந்த சீசனில் மாற்ற அந்த அணி முயற்சி செய்யும்.

ஹைதராபாத் அணி இந்த சீசனில் புதிய பயிற்சியாளர் மானுவல் மார்கீஸ் ரோகா தலைமையில் புதிய வீரர்களுடன் களமிறங்க உள்ளது. அவர் முதல் போட்டியில் வெல்வது மிகவும் முக்கியம் என கூறி உள்ளார். எனவே, இந்தப் போட்டியில் ஹைதராபாத் தெளிவான திட்டத்துடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி திங்கள் அன்று இரவு 7.3௦ மணிக்கு துவங்க உள்ளது. கோவாவில் நடைபெறும் இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் காணலாம்.

Story first published: Monday, November 23, 2020, 17:40 [IST]
Other articles published on Nov 23, 2020
English summary
ISL 2020-21 : Odisha FC vs Hyderabad FC 4th match preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+