Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த டீம் தான் ஜெயிக்கும்.. அடித்து சொல்லும் விமர்சகர்கள்.. பரிதாப நிலையில் ஈஸ்ட் பெங்கால்!

கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஈஸ்ட் பெங்கால் - கோவா இடையே ஆன லீக் போட்டி நடைபெற உள்ளது.

இந்த சீசனில் அறிமுகம் ஆன எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி கடந்த போட்டியில் தான் தன் முதல் வெற்றியை பதிவு செய்து இருந்தது.

ISL 2020-21 : SC East Bengal vs FC Goa match preview

புள்ளிப் பட்டியலில் ஈஸ்ட் பெங்கால் அணி பத்தாம் இடத்தில் உள்ளது. சிறப்பாக ஆடி வரும் கோவா அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

கோவா அணியில் சில பலவீனங்கள் உள்ளன. எனினும், முதல் நான்கு இடங்களுக்குள் இருப்பதால் அந்த அணி நம்பிக்கையுடன் ஆடி வருகிறது. அந்த அணியை வீழ்த்துவது ஈஸ்ட் பெங்கால் அணிக்கு கடினமாகவே இருக்கும்.

கோவா அணி இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே கோல் விட்டுக் கொடுக்காமல் இருந்துள்ளது. மறுபுறம் ஈஸ்ட் பெங்கால் அணி ஒரு போட்டியில் கோல் அடிக்க விடாமல் எதிரணியை தடுக்கவில்லை. இரு அணிகளுமே தடுப்பாட்டத்தில் மோசமாக உள்ளன.

இந்த நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விமர்சகர்கள் கோவா அணியே வெல்லும் என கணித்து வருகின்றனர். அந்த அணி வீரர்கள் இதுதான் திட்டம் என ஒரு நிலைக்கு வந்து விட்டனர். ஈஸ்ட் பெங்கால் அணிக்கு வெற்றி ரகசியம் இதுவரை பிடிபடவில்லை. எனவே, கோவா அணி வெல்லவே வாய்ப்பு அதிகம்.

Story first published: Wednesday, January 6, 2021, 19:53 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+