Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் வெற்றி கிடைக்குமா? ஏக்கத்துடன் ஈஸ்ட் பெங்கால்.. நம்பிக்கையுடன் ஜாம்ஷெட்பூர்.. பரபர மோதல்!

கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெற்று வருகிறது.

இதில் 23வது லீக் போட்டியில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் மோத உள்ளன.

ஈஸ்ட் பெங்கால் அணி இந்த சீசனில் தான் அறிமுகம் ஆகி உள்ளது. அந்த அணி தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

ISL 2020-21 : SC East Bengal vs Jamshedpur FC 23rd match preview

ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டை ஆனது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது அந்த அணி.

ஜாம்ஷெட்பூர் ஐந்து புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஈஸ்ட் பெங்கால் அணி ஒரு புள்ளி கூட பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.

ஜாம்ஷெட்பூர் அணி கடந்த போட்டியில் ஏடிகே மோகன் பகான் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதால் நம்பிக்கையுடன் காணப்படுகிறது.

ஈஸ்ட் பெங்கால் அணி மூன்று போட்டிகளுக்கு பின்பும் பரிதாப நிலையில் தான் உள்ளது. அந்த அணி எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்பதை மட்டுமே இப்போது சிந்தித்து வருகிறது.

இது தொடரின் ஆரம்பம் தான் என்பதால் இப்போதே ஈஸ்ட் பெங்கால் அணி சுதாரித்தால் மற்ற அணிகளை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை கூட பிடிக்கலாம். ஆனால், அதற்கு முதல் வெற்றியை இப்போதே பதிவு செய்ய வேண்டும்.

Story first published: Thursday, December 10, 2020, 18:53 [IST]
Other articles published on Dec 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+