Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுவே எங்களுக்கு பெரிய சாதனை.. போராடி 1 புள்ளி எடுத்த ஈஸ்ட் பெங்கால்.. கோட்டை விட்ட ஜாம்ஷெட்பூர்!

கோவா : 2020 - 21 ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 23வது லீக் போட்டியில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், போட்டி டிராவில் முடிந்தது.

இந்தப் போட்டியில் தான் முதன்முறையாக தோல்வியை தவிர்த்துள்ளது ஈஸ்ட் பெங்கால் அணி. இந்த சீசனில் நான்கு போட்டிகளுக்கு பின் தன் முதல் புள்ளியை பெற்றுள்ளது. ஆனாலும், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலேயே தொடர்ந்து வருகிறது ஈஸ்ட் பெங்கால்.

ISL 2020-21 : SC East Bengal vs Jamshedpur FC 23rd match preview

ஈஸ்ட் பெங்கால் அணி போட்டியின் பெரும்பாலான சமயங்களில் 10 வீரர்களுடன் ஆடியது. யூஜென்சனுக்கு ரெப்ரீ இரண்டு முறை எல்லோ கார்டு காட்டி வெளியேற்றினார். அது ஜாம்ஷெட்பூர் அணிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.

ஆனாலும், ஜாம்ஷெட்பூர் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை தவறவிட்டது அந்த அணி. எனினும், அந்த அணி தான் களத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

கடைசி சில நிமிடங்களில் ஜாம்ஷெட்பூர் அணியிலும் ஒரு வீரர் வெளியேற்றப்பட்டார். இரு அணிகளிலும் 10 வீரர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர். அதனால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கடைசி நிமிடங்களில் இரு அணிகளும் எதிரணி கோல் அடித்து விடக் கூடாது என்பதிலேயே அதிக கவனம் செலுத்தின. ஆட்ட நேர முடிவில் கோல் அடிக்கபடாத நிலையில் போட்டி டிராவில் முடிந்தது.

ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வி அடைந்ததாக விமர்சனம் எழுந்தது. அதே போல, ஈஸ்ட் பெங்கால் அணி இன்னும் தன் மோசமான ஆட்டத்தில் இருந்து மீளவில்லை என்பதும் தெரிந்தது.

Story first published: Friday, December 11, 2020, 1:41 [IST]
Other articles published on Dec 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+