Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேற லெவலில் தயாராகி இருக்கும் ஈஸ்ட் பெங்கால்.. கிலியில் மற்ற அணிகள்!

கோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இடையே ஆன போட்டி நடைபெற உள்ளது.

ஈஸ்ட் பெங்கால் அணி முதல் பாதியில் மிக மோசமாக ஆடி வந்தது. ஆனால், இரண்டாவது பாதியில் அந்த அணி அசுர வேகத்தில் செயல்பட்டு வருகிறது

ISL 2020-21 : SC East Bengal vs kerala Blasters FC match preview

கடந்த ஐந்து போட்டிகளில் தோல்வி அடையாத ஈஸ்ட் பெங்கால், இரண்டு வெற்றிகளையும் பெற்றுள்ளது. அதில் பெங்களூரு எஃப்சி அணிக்கு எதிராக பெற்ற வெற்றி முக்கியமானது ஆகும்.

அது தான் மற்ற அணிகளுக்கு கிலியை உண்டாக்கி உள்ளது. மற்ற அணிகள் முதல் பாதியில் வெற்றிகளை குவித்தாலும் இரண்டாவது பாதியில் சிறிய அணிகளிடம் தடுமாறி வருகின்றன.

அதிலும் ஈஸ்ட் பெங்கால் அணி பெரிய அளவில் முன்னேற்றம் கண்டு இருப்பதால் இனி அந்த அணிக்கு எதிரான போட்டிகளை எதிர்கொள்ள அனைத்து அணிகளும் தங்களை முழுமையாக தயார் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி கடந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக மூன்று கோல்களை அடித்து பெரிய வெற்றியை பெற்று இருந்தது. ஆனாலும், கேரளா அணி பலமான அணியாக மாறி விட்டதாக கருத முடியாது. அந்த அணியில் பல சிக்கல்கள் உள்ளன.

இந்தப் போட்டியிலும் ஈஸ்ட் பெங்கால் அணியே வெற்றி பெறும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

Story first published: Friday, January 15, 2021, 19:19 [IST]
Other articles published on Jan 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+