For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!

கோவா : ஏழாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் இடையே ஆன போட்டி நடைபெற உள்ளது.

மும்பை சிட்டி அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த சீசனில் மிக சிறப்பாக ஆடி வரும் அணியாக உள்ளது. மறுபுறம் ஈஸ்ட் பெங்கால் மோசமான துவக்கத்தில் இருந்து மீண்டு கடந்த ஏழு போட்டிகளில் தோல்வியடையாமல் சமாளித்து முன்னேறி வருகிறது.

இரண்டு அணிகளுமே நல்ல பார்மில் இருக்கும் நிலையில், இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ISL 2020-21 : SC East Bengal vs Mumbai City FC match preview

கடந்த ஏழு போட்டிகளில் இரண்டு வெற்றிகள், ஐந்து டிரா செய்துள்ளது ஈஸ்ட் பெங்கால் அணி. அந்த அணி துவக்கத்தில் பெற்ற மோசமான தோல்விகளுடன் ஒப்பிட்டால் ஐந்து டிரா என்பது நல்ல விஷயமே.

மும்பை சிட்டி அணி கடந்த போட்டியில் ஹைதராபாத் அணியிடம் டிரா செய்து இருக்கிறது. அந்த அணியால் ஹைதராபாத் அணியின் தடுப்பாட்டத்தை உடைக்க முடியவில்லை. அது மட்டுமே ஒரே ஒரு குறை. எனினும், மும்பை சிட்டி அந்த ஒரு டிராவால் துவண்டு விடாது. மேலும், தொடர்ந்து பத்து போட்டிகளில் மும்பை அணி தோல்வி அடையாமல் ஆடி வருகிறது.

ஜெயிக்க முடியாம போச்சே.. ஏமாந்த ஹைதராபாத்.. போராடி டிரா செய்த ஒடிசா!ஜெயிக்க முடியாம போச்சே.. ஏமாந்த ஹைதராபாத்.. போராடி டிரா செய்த ஒடிசா!

ஈஸ்ட் பெங்கால் மற்ற அணிகளுக்கு எதிராக சமாளித்து வந்தாலும், பலமான மும்பை சிட்டி அணியை தாண்டி வெற்றி பெறுவது கடினமே. இந்தப் போட்டியில் மும்பை சிட்டி அணியே வெற்றி பெறும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Friday, January 22, 2021, 20:21 [IST]
Other articles published on Jan 22, 2021
English summary
ISL 2020-21 : SC East Bengal vs Mumbai City FC match preview
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X