Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு நிமிடம்.. சொதப்பிய ஈஸ்ட் பெங்கால்.. காலி செய்த மும்பை சிட்டி!

கோவா : இந்தியன் சூப்பர் லீக் தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் - மும்பை சிட்டி அணிகள் இடையே ஆன லீக் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி வீழ்த்தியது.

ISL 2020-21 : SC East Bengal vs Mumbai City FC match result

இந்தப் போட்டிக்கு முன் ஈஸ்ட் பெங்கால் அணி தொடர்ந்து ஏழு போட்டிகளில் தோல்வி அடையாமல் ஆடி இருந்தது. இந்தப் போட்டியிலும் மும்பை சிட்டி அணியின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஆடியது.

ஆனால், 27வது நிமிடத்தில் தடுப்பாட்டத்தில் சிறிய தவறு செய்தது. அதை சரியாக பயன்படுத்திய மும்பை சிட்டி அணியின் மோர்டாடா ஃபால் கோல் அடித்து அசத்தினார்.

அதன் பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் 1 - 0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணி, ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் வெற்றி மூலம் மூன்று புள்ளிகள் பெற்ற மும்பை சிட்டி அணி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. மேலும், இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏடிகே மோகன் பகான் அணியை விட ஐந்து புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளது.

ஈஸ்ட் பெங்கால் அணி இந்த தோல்வி மூலம் பத்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இனி அந்த அணி முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெறுவது கடினமே.

Story first published: Saturday, January 23, 2021, 10:51 [IST]
Other articles published on Jan 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+