Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் வெற்றி.. டம்மி டீமை போட்டுத் தாக்கிய ஈஸ்ட் பெங்கால்!

கோவா : எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி தன் முதல் சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

தன் எட்டாவது போட்டியில் தான் அந்த அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி ஈஸ்ட் பெங்காலை விட மோசமாக ஆடி வரும் ஒடிசா எஃப்சி அணிக்கு எதிராக கிடைத்தது.

2020-21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் அறிமுகம் ஆனது எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி. தன் முதல் சீசனில் ஆடும் அந்த அணி துவக்கம் முதலே மோசமான தோல்விகளை பெற்று வந்தது.

ISL 2020-21 : SC East Bengal vs Odisha FC match result

இந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது ஈஸ்ட் பெங்கால் அணி. ஒடிசா அணியும் ஒரு வெற்றி கூட பெறாமல் மோசமாக ஆடி வந்தது.

இந்த இரு அணிகளும் மோதிய லீக் போட்டி கோவாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மூன்று கோல் அடித்து மிரட்டியது. முதல் பாதியில் 12 மற்றும் 39வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து 2 - 0 என முன்னிலை வகித்தது ஈஸ்ட் பெங்கால்.

அதன் பின் ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் பரபரப்பு கூடியது. 88வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் மூன்றாவது கோலை அடித்தது. ஒடிசா அணி 90வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆறுதல் அடைந்தது.

போட்டியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் புள்ளிப் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளது ஈஸ்ட் பெங்கால். ஒடிசா கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Story first published: Monday, January 4, 2021, 15:47 [IST]
Other articles published on Jan 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+