Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஊர்.. 2 டீம்.. கொல்கத்தா கிங் யார்.. ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே பரபர மோதல்!

கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் தன் முதல் சீசனில் ஆட உள்ளது எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி.

அந்த அணி மற்றொரு கொல்கத்தா கிளப் அணியான ஏடிகே மோகன் பகான் அணியுடன் மோத உள்ளது.

ஏற்கனவே, கொல்கத்தாவின் பாரம்பரிய கால்பந்து அணியான மோகன் பகான் இந்த சீசனில் இருந்து ஏடிகே அணியுடன் இணைந்து ஆடி வருகிறது.

ISL 2020-21 : SC EB vs ATK MB 8th match preview

ஏடிகே மோகன் பகான் அணி தன் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில், அடுத்ததாக மேற்கு வங்காளத்தின் மற்றொரு அணியான எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியை சந்திக்க உள்ளது.

அதனால் இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஈஸ்ட் பெங்கால் அணி பயிற்சியாளர் ராபி பௌலரின் கீழ் தயாராகி உள்ளது. அந்த அணிக்கு குறைந்த காலமே இருந்ததால் ஐஎஸ்எல் தொடரில் ஒரு வாரம் கழித்தே அந்த அணி தன் முதல் போட்டியில் பங்கேற்க உள்ளது.

அந்த அணி என்ன செய்யப் போகிறது? என்பதே ஒரே கேள்வியாக உள்ளது. ஏடிகே அணியின் ஆட்டத்தை ஏற்கனவே ரசிகர்கள் பார்த்து விட்டனர். ஒரு சாம்பியன் அணி என்பதை முதல் போட்டியிலேயே நிரூபித்தது அந்த அணி. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 1 - 0 என வீழ்த்தி இருந்தது.

ஏடிகே அணியை ஈஸ்ட் பெங்கால் வீழ்த்தினால் அது இந்த தொடரில் பெரிய திருப்புமுனையாக இருக்கும். அந்த அணிக்கும் அது பெரிய ஆரம்பமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Friday, November 27, 2020, 18:54 [IST]
Other articles published on Nov 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+