Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியன் சூப்பர் லீக்: விறுவிறுப்பாக சென்ற சென்னையின் எப்சி vs கேரளா ஆட்டம்.. கடைசியில் டிரா

கோவா: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) தொடரின் இரண்டு முக்கியமான அணிகளான சென்னையின் எப்.சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று டிரா ஆனது.

7வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) தொடர் இந்த முறை கோவாவில் நடந்து வருகிறது. 11 அணிகள் மோதும் தொடர் தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

ISL 2020: Chennaiyin FC will face Kerala blasters today in Goa

இந்த தொடரை சென்னையின் எப்.சி அணி வெற்றியோடு தொடங்கி உள்ளது. ஐ.எஸ்.எல் தொடரில் சென்னையின் எப்சி தனது முதல் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூரை அணியை வீழ்த்தியது.

இந்த நிலையில் வெற்றியை தக்க வைக்கும் நிலையில் இன்று கேரளாவை சென்னை எதிர்கொண்டது. இந்த தொடரில் கேரளா அதிக வலிமையுடன் இருப்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருந்தது. சென்னை அணிக்கு இந்த முறை கோல் போட சில வாய்ப்புகள் கிடைத்தும் அதை தவறவிட்டது.

அதேபோல் சென்னை அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் ஜாகுப் சில்வஸ்டர் தவறவிட்டார். இதன் காரணமாக மொத்த முழு நேர ஆட்ட முடிவில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் எடுக்காமல் சென்னையின் எப்.சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி டிரா ஆனது.

Story first published: Sunday, November 29, 2020, 22:05 [IST]
Other articles published on Nov 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+