Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐஎஸ்எல்.. அடுத்தடுத்து 2 கோல்.. வெற்றிபெறும் வாய்ப்பு பறிபோனது.. சென்னை - ஈஸ்ட் பெங்கால் ஆட்டம் டிரா

கோவா: ஐஎஸ்எல் 2020 தொடரில் இன்று சென்னையின் எப்சி மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்கு இடையில் நடந்த ஆட்டம் டிரா ஆனது.

ஐ.எஸ்.எல் 2020 கால்பந்து தொடர் இந்த முறை கோவாவில் நடந்து வருகிறது. முக்கிய அணிகளின் போட்டிகள் டிராவில் முடிந்து, எதிர்பாராத அணிகள் எல்லாம் வெற்றியை குவிப்பதால் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. 11 அணிகள் மோதும் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ISL 2020: East Bengal team draws the match against Chennaiyin FC

இந்த தொடரை சென்னையின் எப்சி அணி வெற்றியோடுதான் தொடங்கியது. ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றியோடுதான் தொடரை தொடங்கியது. இது வரை நடந்த 6 போட்டிகளில் 2ல் வெற்றி, 2ல் தோல்வி, 2ல் டிரா என்று சென்னை அணி ஆடியது.

இந்த நிலையில் இன்று ஈஸ்ட் பெங்கால் அணிக்கு எதிராக சென்னையின் எப்சி அணி விளையாடியது. தொடக்கத்திலேயே இதில் சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது. லல்லின்சாவுலா 13வது நிமிடத்தில் ஒரு கோல், அதன்பின் ரஹீம் 64வது நிமிடத்தில் இன்னொரு கோல் அடித்தார்.

சென்னை அணி வெற்றிபெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஈஸ்ட் பெங்கால் அணியின் மாட்டி ஸ்டெய்ன்மான் 59 மற்றும் 68வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து சமன் செய்தார். அதன்பின் போட்டி முடியும் வரை இரண்டு அணிகளும் கோல் போடவில்லை.

இதனால் ஐஎஸ்எல் 2020 தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்னையின் எப்சி மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.

Story first published: Saturday, December 26, 2020, 22:44 [IST]
Other articles published on Dec 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+