Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்

கோவா: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) தொடரில் ஜாம்ஷெட்பூர் மற்றும் ஒடிசா எப்.சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கடைசி நொடியில் டிரா ஆனது.

7வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) தொடரின் 10வது ஆட்டம் இன்று கோவாவில் உள்ள திலக் நகரில் ஜாம்ஷெட்பூர் மற்றும் ஒடிசா எப்.சி அணிகளுக்கு இடையில் விறுவிறுப்பாக நடந்தது. ஐ.எஸ்.எல் 2020 கால்பந்து தொடர் இந்த முறை கோவாவில் நடந்து வருகிறது.

11 அணிகள் மோதும் தொடர் தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

ISL 2020: Jamshedpur FC faces Odisha FC in the 10th match

ஐ.எஸ்.எல் தொடரில் சென்னையின் எப்சி அணியிடம் தோல்வி அடைந்த ஜாம்ஷெட்பூர் இன்று ஒடிசா எப்.சியை அணியை எதிர்கொண்டது. ஒடிசா எப்.சி அணியும் தனது முதல் லீக் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது.

ஒடிசா எப்.சி, ஜாம்ஷெட்பூர் இரண்டு அணிகளும் முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடந்தது.

இந்தியன் சூப்பர் லீக் 2020: சென்னையின் எப்சியை எதிர்கொள்ளும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. முக்கிய ஆட்டம்!ஆட்டத்தின் 45 நிமிட முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 2 கோல் எடுத்துள்ளது. ஜாம்ஷெட்பூர் அணியின் நெரிஜுஸ் வால்ஸ்கிஸ் 2 கோல் அடிக்க ஜாம்ஷெட்பூர் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் மீதி பாதியில் வெற்றி பெற வேண்டும் என்ற தீவிரத்துடன் ஒடிசா எப்.சி ஆடியது.

அதற்கு ஏற்றபடி ஒடிசா அணியின் டியாகோ மொரிக்கோ கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல் அடிக்க ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. இதனால் ஒடிசாவும் 2 கோல் எடுத்து போட்டியை டிரா செய்தது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை இரண்டு அணிகளும் கோல் எடுக்காததால் ஆட்டம் டிரா ஆனது.

Story first published: Sunday, November 29, 2020, 21:28 [IST]
Other articles published on Nov 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+