மும்பை: இந்தியன் சூப்பர் லீக் ISL 2025-26 சீசன் பிப்ரவரி 14 அன்று தொடங்கவுள்ளது. இந்திய கால்பந்தின் முக்பிகய லீக் என அறியப்படும் இந்த போட்டித் தொடருக்கான உத்தேச அட்டவணையை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இந்த சீசன் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.
மொத்தம் 91 போட்டிகள் மே 17 வரை தொடர்ச்சியான அட்டவணையுடன் திட்டமிடப்பட்டுள்ளன. சீசனின் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள ஏழு லீக் போட்டிகளும் ஒரே நேரத்தில் தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது கடைசி வரை போட்டித்தன்மை மற்றும் விறுவிறுப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 3 அன்று கொல்கத்தாவின் யுபா பாரதி கிரிடங்கன் மைதானத்தில், பாரம்பரிய மிக்க மோகன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்கு இடையேயான கொல்கத்தா டர்பி போட்டி நடைபெற உள்ளது. இதற்கிடையில், கொல்கத்தாவைச் சேர்ந்த முகமதுன் எஸ்.சி. அணி ஜாம்ஷெட்பூரில் சில போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது.
இந்த சீசனில் ஒரு முக்கிய மைதான மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தனது உள்ளூர் மைதானத்தை கொச்சியிலிருந்து கோழிக்கோட்டில் உள்ள EMS மைதானத்திற்கு மாற்றியுள்ளது. இண்டர் காஷி அணி புவனேஷ்வரில் சில போட்டிகளில் பங்கேற்கிறது. அதேநேரம், மும்பை சிட்டி எஃப்.சி.யின் உள்ளூர் மைதானமான மும்பை கால்பந்து மைதானம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி., பெங்களூரு எஃப்.சி., எஃப்.சி. கோவா போன்ற அணிகள் தங்களது வழமையான உள்ளூர் மைதானங்களில் விளையாடும். எஸ்.சி. டெல்லி மற்றும் பஞ்சாப் எஃப்.சி. அணிகள் டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தை தங்களது உள்ளூர் மைதானமாக பகிர்ந்து கொள்ளவுள்ளன.
ISL 2025-26 உத்தேச போட்டி அட்டவணை:
பிப்ரவரி மாத போட்டிகள்: பிப்ரவரி 14 அன்று மோகன் பகான் Vs கேரளா பிளாஸ்டர்ஸ் (கொல்கத்தா, மாலை 5 மணி) மற்றும் கோவா Vs இண்டர் காஷி (கோவா, இரவு 7:30 மணி) போட்டிகளுடன் லீக் தொடங்குகிறது. பிப்ரவரி 15 அன்று ஜாம்ஷெட்பூர் Vs முகமதுன் (ஜாம்ஷெட்பூர், மாலை 5 மணி) மற்றும் பெங்களூரு Vs டெல்லி (பெங்களூரு, இரவு 7:30 மணி) ஆட்டங்கள் நடைபெறும். பிப்ரவரி 16 அன்று ஒடிசா Vs பஞ்சாப் (புவனேஷ்வர், மாலை 5 மணி) மற்றும் ஈஸ்ட் பெங்கால் Vs நார்த்ஈஸ்ட் யுனைடெட் (கொல்கத்தா, இரவு 7:30 மணி) போட்டிகள் வரிசையாகும்.
பிப்ரவரி 19 அன்று மும்பை சிட்டி Vs சென்னை (மும்பை, இரவு 7:30 மணி). பிப்ரவரி 20 அன்று கோவா Vs முகமதுன் (கோவா, இரவு 7:30 மணி). பிப்ரவரி 21 அன்று ஈஸ்ட் பெங்கால் Vs டெல்லி (கொல்கத்தா, மாலை 5 மணி) மற்றும் ஜாம்ஷெட்பூர் Vs பஞ்சாப் (ஜாம்ஷெட்பூர், இரவு 7:30 மணி). பிப்ரவரி 22 அன்று பெங்களூரு Vs நார்த்ஈஸ்ட் யுனைடெட் (பெங்களூரு, மாலை 5 மணி) மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் Vs மும்பை சிட்டி (கோழிக்கோடு, இரவு 7:30 மணி) போட்டிகள். பிப்ரவரி 23 அன்று மோகன் பகான் Vs சென்னை (கொல்கத்தா, இரவு 7:30 மணி). பிப்ரவரி 24 அன்று ஒடிசா Vs இண்டர் காஷி (புவனேஷ்வர், இரவு 7:30 மணி) போட்டிகள் இடம்பெறும்.
பிப்ரவரி 26 அன்று கோவா Vs டெல்லி (கோவா, இரவு 7:30 மணி). பிப்ரவரி 27 அன்று ஈஸ்ட் பெங்கால் Vs ஜாம்ஷெட்பூர் (கொல்கத்தா, மாலை 5 மணி) மற்றும் பெங்களூரு Vs பஞ்சாப் (பெங்களூரு, இரவு 7:30 மணி). பிப்ரவரி 28 அன்று கேரளா பிளாஸ்டர்ஸ் Vs இண்டர் காஷி (கோழிக்கோடு, மாலை 5 மணி) மற்றும் முகமதுன் Vs மோகன் பகான் (ஜாம்ஷெட்பூர், இரவு 7:30 மணி) போட்டிகளுடன் பிப்ரவரி மாத ஆட்டங்கள் நிறைவடைகின்றன.
மார்ச் மாத போட்டிகள்: மார்ச் 1 அன்று ஒடிசா Vs சென்னை (புவனேஷ்வர், மாலை 5 மணி) மற்றும் மும்பை சிட்டி Vs நார்த்ஈஸ்ட் யுனைடெட் (மும்பை, இரவு 7:30 மணி). மார்ச் 5 அன்று ஈஸ்ட் பெங்கால் Vs கோவா (கொல்கத்தா, மாலை 5 மணி). மார்ச் 6 அன்று ஒடிசா Vs மோகன் பகான் (புவனேஷ்வர், மாலை 5 மணி) மற்றும் ஜாம்ஷெட்பூர் Vs இண்டர் காஷி (ஜாம்ஷெட்பூர், இரவு 7:30 மணி).
மார்ச் 7 அன்று கேரளா பிளாஸ்டர்ஸ் Vs சென்னை (கோழிக்கோடு, மாலை 5 மணி) மற்றும் பெங்களூரு Vs முகமதுன் (பெங்களூரு, இரவு 7:30 மணி). மார்ச் 8 அன்று மும்பை சிட்டி Vs டெல்லி (மும்பை, இரவு 7:30 மணி). மார்ச் 9 அன்று பஞ்சாப் Vs நார்த்ஈஸ்ட் யுனைடெட் (டெல்லி, இரவு 7:30 மணி) போட்டிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
மார்ச் 13 அன்று சென்னை Vs முகமதுன் (சென்னை, மாலை 5 மணி) மற்றும் டெல்லி Vs ஒடிசா (டெல்லி, இரவு 7:30 மணி). மார்ச் 14 அன்று ஈஸ்ட் பெங்கால் Vs கேரளா பிளாஸ்டர்ஸ் (கொல்கத்தா, மாலை 5 மணி) மற்றும் பெங்களூரு Vs மோகன் பகான் (பெங்களூரு, இரவு 7:30 மணி). மார்ச் 15 அன்று நார்த்ஈஸ்ட் யுனைடெட் Vs ஜாம்ஷெட்பூர் (கவுகாத்தி, மாலை 5 மணி) மற்றும் இண்டர் காஷி Vs மும்பை சிட்டி (புவனேஷ்வர், இரவு 7:30 மணி) போட்டிகள் நடைபெறும்.
மார்ச் 19 அன்று டெல்லி Vs ஜாம்ஷெட்பூர் (டெல்லி, இரவு 7:30 மணி). மார்ச் 20 அன்று நார்த்ஈஸ்ட் யுனைடெட் Vs ஒடிசா (கவுகாத்தி, மாலை 5 மணி) மற்றும் மோகன் பகான் Vs மும்பை சிட்டி (கொல்கத்தா, இரவு 7:30 மணி). மார்ச் 21 அன்று முகமதுன் Vs ஈஸ்ட் பெங்கால் (ஜாம்ஷெட்பூர், மாலை 5 மணி) மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் Vs பஞ்சாப் (கோழிக்கோடு, இரவு 7:30 மணி). மார்ச் 22 அன்று சென்னை Vs கோவா (சென்னை, மாலை 5 மணி) மற்றும் இண்டர் காஷி Vs பெங்களூரு (புவனேஷ்வர், இரவு 7:30 மணி) ஆகிய போட்டிகளுடன் மார்ச் மாத ஆட்டங்கள் முடிவடைகின்றன.
ஏப்ரல் மாத போட்டிகள்: ஏப்ரல் 3 அன்று பஞ்சாப் Vs முகமதுன் (டெல்லி, இரவு 7:30 மணி). ஏப்ரல் 4 அன்று ஜாம்ஷெட்பூர் Vs மோகன் பகான் (ஜாம்ஷெட்பூர், மாலை 5 மணி) மற்றும் கோவா Vs பெங்களூரு (கோவா, இரவு 7:30 மணி). ஏப்ரல் 5 அன்று டெல்லி Vs கேரளா பிளாஸ்டர்ஸ் (நியூ டெல்லி, மாலை 5 மணி) மற்றும் மும்பை சிட்டி Vs ஒடிசா (மும்பை, இரவு 7:30 மணி) ஆகியன.
ஏப்ரல் 7 அன்று சென்னை Vs இண்டர் காஷி (சென்னை, இரவு 7:30 மணி). ஏப்ரல் 9 அன்று ஜாம்ஷெட்பூர் Vs மும்பை சிட்டி (ஜாம்ஷெட்பூர், இரவு 7:30 மணி). ஏப்ரல் 10 அன்று நார்த்ஈஸ்ட் யுனைடெட் Vs டெல்லி (கவுகாத்தி, மாலை 5 மணி) மற்றும் கோவா Vs ஒடிசா (கோவா, இரவு 7:30 மணி) போட்டிகளும் உள்ளன.
ஏப்ரல் 11 அன்று சென்னை Vs ஈஸ்ட் பெங்கால் (சென்னை, மாலை 5 மணி) மற்றும் பெங்களூரு Vs கேரளா பிளாஸ்டர்ஸ் (பெங்களூரு, இரவு 7:30 மணி). ஏப்ரல் 12 அன்று இண்டர் காஷி Vs முகமதுன் (புவனேஷ்வர், மாலை 5 மணி) மற்றும் மோகன் பகான் Vs பஞ்சாப் (கொல்கத்தா, இரவு 7:30 மணி) ஆகிய போட்டிகள் நடைபெறும்.
ஏப்ரல் 15 அன்று கேரளா பிளாஸ்டர்ஸ் Vs நார்த்ஈஸ்ட் யுனைடெட் (கோழிக்கோடு, இரவு 7:30 மணி). ஏப்ரல் 16 அன்று ஈஸ்ட் பெங்கால் Vs பெங்களூரு (கொல்கத்தா, இரவு 7:30 மணி). ஏப்ரல் 17 அன்று சென்னை Vs டெல்லி (சென்னை, மாலை 5 மணி) மற்றும் ஒடிசா Vs முகமதுன் (புவனேஷ்வர், இரவு 7:30 மணி) ஆகிய போட்டிகள் இடம்பெறும்.
ஏப்ரல் 18 அன்று கேரளா பிளாஸ்டர்ஸ் Vs ஜாம்ஷெட்பூர் (கோழிக்கோடு, மாலை 5 மணி) மற்றும் கோவா Vs மும்பை சிட்டி (கோவா, இரவு 7:30 மணி). ஏப்ரல் 19 அன்று நார்த்ஈஸ்ட் யுனைடெட் Vs மோகன் பகான் (கவுகாத்தி, இரவு 7:30 மணி). ஏப்ரல் 20 அன்று பஞ்சாப் Vs இண்டர் காஷி (நியூ டெல்லி, இரவு 7:30 மணி) ஆகிய போட்டிகள் நடக்கவுள்ளன.
ஏப்ரல் 23 அன்று கேரளா பிளாஸ்டர்ஸ் Vs ஒடிசா (கோழிக்கோடு, இரவு 7:30 மணி). ஏப்ரல் 24 அன்று நார்த்ஈஸ்ட் யுனைடெட் Vs கோவா (கவுகாத்தி, மாலை 5 மணி) மற்றும் ஈஸ்ட் பெங்கால் Vs பஞ்சாப் (கொல்கத்தா, இரவு 7:30 மணி). ஏப்ரல் 25 அன்று பெங்களூரு எஃப்.சி. Vs மும்பை சிட்டி (பெங்களூரு, மாலை 5 மணி) மற்றும் ஜாம்ஷெட்பூர் Vs சென்னை (ஜாம்ஷெட்பூர், இரவு 7:30 மணி).
ஏப்ரல் 26 அன்று டெல்லி Vs முகமதுன் (நியூ டெல்லி, மாலை 5 மணி) மற்றும் மோகன் பகான் Vs இண்டர் காஷி (கொல்கத்தா, இரவு 7:30 மணி). ஏப்ரல் 28 அன்று ஈஸ்ட் பெங்கால் Vs ஒடிசா (கொல்கத்தா, இரவு 7:30 மணி) ஆகிய போட்டிகளுடன் ஏப்ரல் மாத ஆட்டங்கள் முடிவடைகின்றன.
மே மாத போட்டிகள்: மே 1 அன்று ஜாம்ஷெட்பூர் Vs கோவா (ஜாம்ஷெட்பூர், இரவு 7:30 மணி). மே 2 அன்று இண்டர் காஷி Vs நார்த்ஈஸ்ட் யுனைடெட் (புவனேஷ்வர், மாலை 5 மணி) மற்றும் டெல்லி Vs பஞ்சாப் (நியூ டெல்லி, இரவு 7:30 மணி). மே 3 அன்று முகமதுன் Vs மும்பை சிட்டி (ஜாம்ஷெட்பூர், மாலை 5 மணி) மற்றும் மோகன் பகான் Vs ஈஸ்ட் பெங்கால் (கொல்கத்தா, இரவு 7:30 மணி) ஆகியன.
மே 4 அன்று ஒடிசா Vs பெங்களூரு (புவனேஷ்வர், இரவு 7:30 மணி). மே 6 அன்று பஞ்சாப் Vs சென்னை (நியூ டெல்லி, இரவு 7:30 மணி). மே 8 அன்று மும்பை சிட்டி Vs ஈஸ்ட் பெங்கால் (இரவு 7:30 மணி). மே 9 அன்று கோவா Vs மோகன் பகான் (கோவா, மாலை 5 மணி) மற்றும் ஜாம்ஷெட்பூர் Vs பெங்களூரு (ஜாம்ஷெட்பூர், இரவு 7:30 மணி) ஆகிய போட்டிகள் நடக்கவுள்ளன.
மே 10 அன்று கேரளா பிளாஸ்டர்ஸ் Vs முகமதுன் (கோழிக்கோடு, மாலை 5 மணி) மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் Vs சென்னை (கவுகாத்தி, இரவு 7:30 மணி). மே 11 அன்று டெல்லி Vs இண்டர் காஷி (நியூ டெல்லி, இரவு 7:30 மணி) ஆகிய போட்டிகள் நடைபெறும்.
இறுதியாக, மே 17 அன்று சீசனின் கடைசி சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன: இண்டர் காஷி Vs ஈஸ்ட் பெங்கால் (புவனேஷ்வர்); கேரளா பிளாஸ்டர்ஸ் Vs கோவா (கோழிக்கோடு); ஜாம்ஷெட்பூர் Vs ஒடிசா (ஜாம்ஷெட்பூர்); பஞ்சாப் Vs மும்பை சிட்டி (நியூ டெல்லி); மோகன் பகான் Vs டெல்லி (கொல்கத்தா); நார்த்ஈஸ்ட் யுனைடெட் Vs முகமதுன் (கவுகாத்தி); சென்னை Vs பெங்களூரு (சென்னை).