Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல்... பிரச்னைகளை சமாளித்து ஜொலிக்குமா ஜப்பான்!

சென்னை: 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடந்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

Japan campaign starts with problem in the fifa world cup

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.

Japan campaign starts with problem in the fifa world cup

நாடு : ஜப்பான்
எச் பிரிவில் கொலம்பியா, போலந்து, செனகலுடன் உள்ளது.

லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 19ல் கொலம்பியா
ஜூன் 24ல் செனகல்
ஜூன் 28ல் போலந்து

பிபா தரவரிசை : 60

கடந்த உலகக் கோப்பையில் - பிரிவு சுற்றிலேயே வெளியேறியது

உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 2002, 2010ல் காலிறுதிக்கு முந்தைய சுற்று

முக்கிய வீரர்கள் : ஷின்ஜி ககாவா, ஷின்ஜி ஒகாசாகி, கேசுகே ஹோன்டா, மாயா யோஷிடா.

கோச் : அகிரா நிஷினோ
---
உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் பி பிரிவில் சவுதி அரேபியா மற்றும் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்து உலகக் கோப்பைக்கு வந்துள்ளது ஜப்பான்.

உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற கொண்டாட்டத்தில் இருந்த நிலையில், அணியின் கோச்சாக இருந்த போஸ்னியாவைச் சேர்ந்த வாஹித் ஹாலிஹோட்ஜிக் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டார்.

அவருக்குப் பதிலாக அணியின் தொழில்நுட்ப இயக்குநராக இருந்த அகிரா நிஷினோ புதிய கோச் ஆனார். ஆனால், அவருடன், ஜப்பான் வீரர்கள் இன்னும் சரியாக புரிந்து செயல்படவில்லை.

உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற பிறகு நடந்த மூன்று பயிற்சி ஆட்டங்களிலும் ஜப்பான் தோல்வி அடைந்துள்ளது. மிகவும் சிறந்த வீரர்கள் சிலர் இருந்தபோதும், உலகக் கோப்பைக்கு ஜப்பான் இன்னும் தயாராகவில்லை.

சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற ஜப்பானியர்கள், மிகவும் வேகமாக விளையாடக் கூடியவர்கள். போலந்து மற்றும் கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டம் சற்று சுலபமாக இருக்கலாம். ஆனால், செனகலுக்கு எதிரான ஆட்டம் மிகவும் சவாலாகவே இருக்கும்.

அதற்கு முன், கோச்சை புரிந்து கொண்டு சரியாக செயல்பட வேண்டிய மிகப் பெரிய சவால் ஜப்பானுக்கு உள்ளது.

Story first published: Tuesday, June 5, 2018, 9:28 [IST]
Other articles published on Jun 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+