Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி விசில் அடிக்கும் நேரத்தில் கோல்.... போராடிய ஜப்பானை 3-2 என வென்றது பெல்ஜியம்!

சமாரா: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த பரபரப்பான நாக் அவுட் ஆட்டத்தில் கடைசி விநாடியில் கோலடித்து, ஜப்பானுக்கு எதிராக 3-2 என திரில் வெற்றி பெற்றது பெல்ஜியம். ஆறாவது அணியாக காலிறுதிக்கு பெல்ஜியம் நுழைந்தது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், குரேஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்று முன்னேறியுள்ளன.

காலிறுதிக்கு முன்னேறின

காலிறுதிக்கு முன்னேறின

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. அர்ஜென்டினாவை 4-3 என வென்று பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது. போர்ச்சுகலை 2-1 என வென்று உருகுவே முன்னேறியது. நேற்று நடந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்டில் 4-3 என ஸ்பெயினை வென்று காலிறுதி நுழைந்தது ரஷ்யா. மற்றொரு ஆட்டத்தில் குரேஷியா 3-2 என பெனால்டி ஷூட்டில் டென்மார்க்கை வென்று காலிறுதிக்கு முன்னேறியது. மெக்சிகோவை 2-0 என வென்று பிரேசில் காலிறுதி நுழைந்துள்ளது.

இந்த உலகக் கோப்பையில்

இந்த உலகக் கோப்பையில்

இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த பெல்ஜியம் மூன்று ஆட்டங்களிலும் வென்றது. பனாமாவை 3-0, துனீஷியாவை 5-2, இங்கிலாந்து 1-0 என வென்றது. எச் பிரிவில் இடம்பெற்றிருந்த ஜப்பான் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா செய்தது. கொலம்பியாவை 2-1 என வென்றது. செனகலுடன் 2-2 என டிரா செய்தது. போலந்திடம் 1-0 என தோல்வியடைந்தது. கடைசியில் ஃபேர் பிளே அடிப்படையில் செனகலை பின்னுக்கு தள்ளி முன்னேறியது ஜப்பான்.

மிரட்டிய பெல்ஜியம்

மிரட்டிய பெல்ஜியம்

தற்போது 13வது உலகக் கோப்பைகளில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதி வரை நுழைந்து அசத்தியது. கடந்த உலகக் கோப்பையிலும் பிரிவுச் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்றது. காலிறுதியில் அர்ஜென்டினாவிடம் போராடி தோல்வியடைந்தது. தொடர்ந்து ஆறாவது உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஜப்பான் முதல் முறையாக காலிறுதிக்கு நுழையும் வாய்ப்பை எதிர்நோக்கி களமிறங்கியுள்ளது.

சூப்பர் ஆட்டம்

சூப்பர் ஆட்டம்

இன்று நடந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. 48வது நிமிடத்தில் ஹராகுச்சி கோலடிக்க ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது. 52வது நிமிடத்தில் இனூய் கோலடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது. 69வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் வெடோன்கென் கோலடிக்க 2-1 என முன்னிலை குறைந்தது. 74வது நிமிடத்தில் பெலானி கோலடிக்க 2-2 என சமநிலை உருவானது. ஆட்ட நேரம் முடிவடைதற்காக கடைசி விநாடியில் மியூனர் அளித்தப் பந்தை சாதல் கோலாக்க 3-2 என பெல்ஜியம் திரில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆறாவது அணியாக காலிறுதிக்கு நுழைந்தது. கடுமையாக போராடிய ஜப்பான் பரிதாபமாக வெளியேறியது.

Story first published: Tuesday, July 3, 2018, 1:33 [IST]
Other articles published on Jul 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+