Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அணியை நெனைச்சு பெருமையா பீல் பண்றதுக்கு நெறைய காரணங்கள் இருக்கு... சென்னையின் எப்சி கோச்!

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 102வது போட்டி பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் சென்னையின் எப்சி அணிகள் மோதவுள்ளன.

இதனிடையே சென்னையின் எப்சி அணி குறித்து பெருமை கொள்வதற்கு அதிக காரணங்கள் உள்ளதாக அந்த அணியின் கோச் சிஸாபா லாஸ்லோ தெரிவித்துள்ளார்.

102வது போட்டி

102வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 102வது போட்டி கோவாவின் பேம்போலிம்மில் ஜிஎம்சி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் சென்னையின் எப்சி அணிகள் மோதவுள்ளன. இந்த இரு அணிகளும் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 10வது மற்றும் 8வது இடங்களில் உள்ளன.

தலைமை கோச் பதவி விலகல்

தலைமை கோச் பதவி விலகல்

கடந்த போட்டியில் ஐதராபாத் எப்சி அணியுடன் மோதி 4க்கு 0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தோல்வி கண்டுள்ளது. இதையடுத்து அந்த அணியின் தலைமை கோச் கிபு விகுணா தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் இவ்வாறு விலகியுள்ள 9வது கோச் இவர்.

10வது இடம்

10வது இடம்

இந்த சீசனில் அந்த அணி சொதப்பலான ஆட்டங்களையே அளித்து வருகிறது. கடந்த 18 போட்டிகளில் எதிரணிக்கு 33 கோல்களை அணி வீரர்கள் வாரி கொடுத்துள்ளனர். ஐஎஸ்எல் பட்டியலில் கீழிறிருந்து 2வது இடத்தை மட்டுமே அந்த அணியால் தற்போது பிடிக்க முடிந்துள்ளது.

சென்னையின் கோச் பெருமிதம்

சென்னையின் கோச் பெருமிதம்

இதனிடையே கடந்த நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிக்கு எதிரான போட்டியை 3க்கு 3 என்ற கோல் கணக்கில் சென்னையின்எப்சி அணி டிரா செய்துள்ளது. கடந்த 18 போட்டிகளில் 16 முறை அந்த அணி கோல்களை அடித்துள்ளது. ஆயினும் அணி குறித்து தான் பெருமை கொள்வதற்கு அதிக காரணங்கள் உள்ளதாக அணியின் கோச் சிஸாபா லாஸ்லா தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, February 21, 2021, 20:06 [IST]
Other articles published on Feb 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+