Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 மேட்ச் தோத்தா என்ன... இன்னும் நிறைய போட்டிகள் இருக்கு... கேரளா பிளாஸ்டர்ஸ் கோச் நம்பிக்கை

பாம்போலின், கோவா : ஐஎஸ்எல் 2020-21 தொடர் கோவாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2 போட்டிகளில் தோல்வியடைந்து சென்னையின் எப்சி அணிக்கு எதிரான போட்டியில் டிரா செய்துள்ளது.

இந்நிலையில், அடுத்து வரும் போட்டிகளில் கேரளா பிளாஸ்டர்ஸ் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று அந்த அணியின் கோச் கிபு விகுணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கணக்கை துவக்காத கேரளா பிளாஸ்டர்ஸ்

வெற்றிக்கணக்கை துவக்காத கேரளா பிளாஸ்டர்ஸ்

ஐஎஸ்எல் தொடரில் இதுவரை வெற்றிக்கணக்கை துவக்காத நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சென்னையின் எப்சி அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்துள்ளது.

8வது இடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்

8வது இடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்

ஐஎஸ்எல் 2020-21 புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது கேரளா பிளாஸ்டர்ஸ். தோல்வியுடன் துவங்கியுள்ள தொடரில் சென்னையின் எப்சி அணிக்கு எதிரான டிரா நம்பிக்கை அளித்துள்ளதாகவும், வரும் போட்டிகளில் திறமையான ஆட்டத்தை தங்களது அணி வெளிப்படுத்தும் என்றும் அணியின் கோச் விகுணா குறிப்பிட்டுள்ளார்.

மத்தியில் சிறப்பான ஆட்டம்

மத்தியில் சிறப்பான ஆட்டம்

சென்னையின் அணிக்கு எதிரான போட்டியில் துவக்கத்தில் தங்களது ஆட்டம் சிறப்பாக இல்லாத நிலையில், மத்தியில் சரியாக விளையாடியதாகவும் இரண்டாவது நிலையில் நிலையான ஆட்டத்தை விளையாடியதாகவும் விகுணா மேலும் குறிப்பிட்டார். இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால் புள்ளிகளை தொடர்ந்து பெற முடியும் என்றார் அவர்.

ஹூப்பர் குறித்து நம்பிக்கை

ஹூப்பர் குறித்து நம்பிக்கை

கேரளாவின் முக்கிய வீரர் கேரி ஹூப்பர் வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கோல்களை அடிப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த சீசன் கேரிக்கு சிறப்பாக அமையும் என்றும் கூறினார். இந்த தொடரில் இதுவரை ஆடிய போட்டிகளில் கோல் அடிக்க தங்களுக்கு கிடைத்த பல வாய்ப்புகளை கேரளா பிளாஸ்டர்ஸ் தவறவிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக எப்சி கோவா அணியுடன் மோதவுள்ளது.

Story first published: Tuesday, December 1, 2020, 16:44 [IST]
Other articles published on Dec 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+