Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு வெற்றிகூட இல்ல... முதல் வெற்றியை சொந்தமாக்க துடிக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்

பேம்போலிம் : கோவாவின் பேம்போலிம்மில் ஜிஎம்சி மைதானத்தில் இன்று ஐஎஸ்எல் 2020-21ன் 40வது போட்டி நடைபெறவுள்ளது.

இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள் மோதவுள்ளன.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ஒரு நேரடி வெற்றியையும் இந்த தொடரில் அடையவில்லை.

இன்று 40வது போட்டி

இன்று 40வது போட்டி

கோவாவின் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 40வது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள் மோதவுள்ளன. இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் ஒன்றில் கூட நேரடி வெற்றியை பெறாத கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி அணி, ஐதராபாத் எப்சி அணியுடன் இன்றைய போட்டியில் மோதவுள்ளது.

9வது இடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்

9வது இடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்

கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி அணி இந்த தொடரில் இதுவரை தான் விளையாடியுள்ள 6 போட்டிகளில் 3 போட்டிகளில் டிரா மற்றும் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து ஐஎஸ்எல் 2020 புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

ஐதராபாத் அணியும் தீவிரம்

ஐதராபாத் அணியும் தீவிரம்

இதனிடையே, கேரளா அணியுடன் இன்று மோதவுள்ள ஐதராபாத் எப்சி அணி தான் விளையாடியுள்ள 6 போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் 3 போட்டிகளில் டிராவும் செய்து 9 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் கட்டாயம் இந்த அணிக்கும் உள்ளது. அப்போதுதான் புள்ளிகள் பட்டியலில் முன்னேற முடியும்.

7.30 மணிக்கு துவக்கம்

7.30 மணிக்கு துவக்கம்

இன்றைய போட்டி பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஏசியாநெட் ப்ளஸ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் ஜியோ டிவியிலும் லைவ்வாக ஒளிபரப்பப்படுகிறது.

Story first published: Sunday, December 27, 2020, 21:30 [IST]
Other articles published on Dec 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+