Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐதராபாத்தை தட்டி தூக்கிய கேரளா பிளாஸ்டர்ஸ்... முதல் வெற்றிக் கொண்டாட்டம்

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 40வது போட்டி நேற்றைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள் மோதிய நிலையில், கேரளா பிளாஸ்டர்ஸ் 2க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் தனது முதல் வெற்றியை கேரளா பிளாஸ்டர்ஸ் பெற்றுள்ளது.

40வது போட்டி

40வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 40வது போட்டி நேற்றைய தினம் கோவாவின் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெற்றது. கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஐதராபாத் எப்சி அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்த போட்டியில் 2க்கு 0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

கேரளா பிளாஸ்டர்ஸ் அபாரம்

கேரளா பிளாஸ்டர்ஸ் அபாரம்

இதுவரை போட்டியிட்டுள்ள 6 ஆட்டங்களில் ஒரு நேரடி வெற்றியை கூட பெறாத கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தற்போது இந்த வெற்றியின் மூலம் தன்னுடைய வெற்றிக் கணக்கை துவக்கியுள்ளது. ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 9வது இடத்திலேயே தொடர்கிறது.

அடுத்தடுத்த கோல்கள்

அடுத்தடுத்த கோல்கள்

நேற்றைய போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ஹக்கு மற்றும் ஜோர்டன் முர்ரேவின் அடுத்தடுத்த கோல்களால் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் பகுதியில் ஹக்கு கோல் அடித்து தன்னுடைய அணியை முன்னிலை படுத்திய நிலையில், இரண்டாவது பகுதியில் முர்ரே தனது சிறப்பான கோல் மூலம் அணியை வெற்றிப்பெற செய்தார்.

ஐதராபாத் சொதப்பல்

ஐதராபாத் சொதப்பல்

ஐதராபாத் அணி வீரர்களும் தன்னுடைய அணியின் வெற்றிக்கு போராடிய நிலையில், முதல் பகுதியில் அந்த அணியின் முயற்சிகள் அனைத்தும் வீணானது. ராய் ஏற்படுத்திக் கொடுத்த கோல் அடிக்கும் வாய்ப்பை சாந்தனா மிஸ் செய்தது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

Story first published: Monday, December 28, 2020, 11:03 [IST]
Other articles published on Dec 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+