Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய பூச்சி ரொனால்டோ.. வெங்காயம் ரோட்ரிகெஸ்.. கால்பந்து வீரர்களின் பட்டப்பெயர் தெரியுமா? இதோ லிஸ்ட்

மாட்ரிட் : ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற "லா லிகா" கால்பந்து தொடரில் புகழ்பெற்ற கால்பந்து வீரர்கள் ஆடி வருகிறார்கள்.

லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ என பல நட்சத்திர வீரர்களை உருவாக்கி மெருகேற்றியது லா லிகா தொடர் தான்.

அந்த கிளப் தொடரில் பல வீரர்களுக்கு பட்டப் பெயர்கள் உண்டு. அவை மிகவும் வித்தியாசமானவை. "இப்படி எல்லாமா பட்டப் பெயர் வைப்பீங்க?" என நம்மை வியப்பில் ஆழ்த்தும் பத்து பெயர்கள் இங்கே.

உண்ணி மெஸ்ஸி

உண்ணி மெஸ்ஸி

லா லிகா தொடர்களில் அதிக கோல் அடித்த வீரர் லியோனல் மெஸ்ஸி. தன் 13 வயதில் இருந்தே பார்சிலோனா அணியுடன் இணைந்து கால்பந்து ஆடி வருகிறார். அவரது பட்டப் பெயர் ஸ்பானிஷ் மொழியில் "லா புல்கா". அதாவது உண்ணி என்று அர்த்தம்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

மெஸ்ஸிக்கு சிறு வயதில் உடல் வளர்ச்சியில் பிரச்சனை இருந்தது. அவரது வயதில் உள்ளவர்களை விட அவரது உடல் சற்று வளர்ச்சி குறைந்து காணப்படும். மேலும், அவர் களத்தில் மிக வேகமாக ஓடி பந்தை தட்டிச் செல்வதையும் சேர்த்து "உண்ணி அல்லது அடாமிக் உண்ணி" என அழைக்கப்படுகிறார்.

எல் பிகோ

எல் பிகோ

அடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி பார்ப்போம். இவர் மெஸ்ஸிக்கு அடுத்து லா லிகா தொடரில் அதிக கோல் அடித்தவர். இவரை பிரபல ஸ்பானிஷ் செய்தியாளர் மனோலோ லாமா "எல் பிகோ" என அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

பெரிய பூச்சி ரொனால்டோ

பெரிய பூச்சி ரொனால்டோ

பின் "எல் பிகோ" என்பதே கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பட்டப் பெயராக மாறியது. அதன் அர்த்தம் பெரிய பூச்சி என்பது. எதிரணியை பயமுறுத்தி, சிதற வைப்பதால் இந்த பெயரை வைத்ததாக லாமாவே விளக்கம் அளித்துள்ளார்.

இவர் பொன்னிறமான அம்பு

இவர் பொன்னிறமான அம்பு

அடுத்து ரியல் மாட்ரிட் அணியின் ஜாம்பவான் அல்பிரெடோ டி ஸ்டேபானோ. இவரது பட்டப்பெயர் "லா செட்டா ரூபியா" என்பது. இதன் அர்த்தம் பொன்னிறமான அம்பு. அவரது தலை முடி பொன்னிறத்தில் இருப்பதோடு, அவர் மின்னல் வேகத்தில் ஆடுவதால் இந்தப் பெயரை பெற்றார்.

தனித்துவமான ரொனால்டோ

தனித்துவமான ரொனால்டோ

அடுத்தவர் ரொனால்டோ நசாரியோ. கால்பந்து உலகில் பல ரொனால்டோக்கள் உள்ளனர். அவர்களில் பலரும் சிறப்பு வாய்ந்த வீரர்களாகவும் இருந்துள்ளனர். அதை குறித்து 20 வயதில் இருந்த ரொனால்டோ நசாரியோவை பற்றி சக வீரர் பாலோ மால்டினி ஒருமுறை பேசுகையில், இவர் தனித்துவமான (பினோமினோ) வீரராக இருப்பாரா? என கூறி உள்ளார். அதை நிரூபிக்கும் வகையில் அவர் தன் 20 வயதில் லா லிகாவில் ஒரு சீசனில் அதிகபட்ச கோல்கள் அடித்து சாதனை செய்தார். அப்போது முதல் "எல் பினோமினோ" என அழைக்கப்படுகிறார்.

“சுறா” கார்லோஸ்

“சுறா” கார்லோஸ்

பார்சிலோனா அணியின் முன்னாள் வீரர் கார்லோஸ் புயோல்-இன் பட்டப்பெயர் "எல் டிபுரோன்" அதன் அர்த்தம் சுறா. ஸ்பானிஷ் வர்ணனையாளர் ஆன்ட்றேஸ் மொன்டேஸ் அவரது வெறித்தனமான ஆட்டத்தை வைத்து அந்தப் பெயரால் அழைத்து பிரபலம் ஆக்கினார்.

வெங்காயம் ரோட்ரிகெஸ்

வெங்காயம் ரோட்ரிகெஸ்

அட்லெடிகோ டி மாட்ரிட் அணியின் கிறிஸ்டியன் ரோட்ரிகெஸ்-இன் பட்டப் பெயர் "செபோல்லா". இதன் அர்த்தம் வெங்காயம். அட.. உண்மைதாங்க. சிலர் அவரது உடல் அமைப்பால் இந்த பெயரை பெற்றார் என கூறுகிறார்கள். ஆனால் உண்மையில், அவரது துவக்க காலத்தில் உருகுவே கிளப் போட்டிகளில் எதிரணியை கண்ணீர் விட வைப்பவர் என்ற பொருளில் அவரை வெங்காயம் என அழைத்துள்ளனர்.

கடற் கொள்ளைக்காரன் க்ராநீரோ

கடற் கொள்ளைக்காரன் க்ராநீரோ

எஸ்டெபான் க்ராநீரோவின் பட்டப் பெயர் "எல் பைரேட்டா". அதாவது கடற் கொள்ளைக்காரன். அவர் தன் ஒற்றைக் கண்ணை மறைத்துக் கொண்டு கோல் அடித்ததை கொண்டாடியதால் அந்தப் பெயர். பாப்லோ அல்பாரோவின் பட்டப் பெயர் "எல் சிருஜானோ". இதன் அர்த்தம் அறுவை சிகிச்சை நிபுணர். இவர் மருத்துவம் படித்த உண்மையான அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால் இந்தப் பெயர். ஆனால், இதுவரை கால்பந்தை விட்டு அவர் பிரியவில்லை.

மந்திரவாதி முனியேன்

மந்திரவாதி முனியேன்

ஐக்கர் முனியேன்-இன் பட்டப் பெயர் பார்ட். புகழ்பெற்ற பார்ட் சிம்ப்சன் என்ற கார்ட்டூன் பெயரால் இவர் இப்படி அழைக்கப்படுகிறார். இவர் 16 வயதிலேயே கால்பந்து கிளப்பில் இடம் பெற்றதால் இந்தப் பெயராம். ஜோன் கார்லோஸ் வலேரான்இன் செல்லப் பெயர் "எல் மாகோ". இதன் அர்த்தம் மந்திரவாதி. இவரது திறமை மற்றும் போட்டிகளை கணிக்கும் திறன் காரணமாக இந்த பெயரை பெற்றார்.

Story first published: Thursday, May 7, 2020, 15:06 [IST]
Other articles published on May 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+