இந்தப் படத்தை மெஸ்ஸி பார்த்து மெல்ட் ஆகி ஓய்வு முடிவை கைவிடுவாரா?
பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி தனது ஓய்வு முடிவைக் கைவிடக் கோரி கவர்ச்சி மாடல் அழகி ஒருவர் வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டு மெஸ்ஸி போக வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
"மிஸ் பம் பம்" என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த அழகி, மெஸ்ஸி அணியும் 10ம் எண் ஜெர்சியுடன், வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து தனது பின்னழைக் காட்டி போஸ் கொடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கூடவே மெஸ்ஸி போகக் கூடாது என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.
இத்தனைக்கும் இவர் அர்ஜென்டினா நாட்டு அழகி அல்ல. மாறாக பிரேசில் நாட்டு அழகி. இவரது பெயர் சுஸி கோர்டஸ். இவர் மெஸ்ஸியின் ரசிகையும் ஆவார். அடிக்கடி மெஸ்ஸி குறித்த படங்கள், செய்திகளை இன்ஸ்டாகிராமில் போட்டு வருவார். இப்போது மெஸ்ஸிக்காக தனது படத்தைப் போட்டுள்ளார்.
சர்வதேச கால்பந்துக்கு மெஸ்ஸி குட்பை சொன்னதை தான் விரும்பவில்லை என்றும், அது தனக்கு ஏமாற்றம் தருவதாகவும் சுஸி கூறியுள்ளார். மெஸ்ஸி தொடர்ந்து விளையாட வேண்டும், அதற்காகவே இந்தப் படங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications