For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனிதத்தை காட்டும் தருணம்... கொரோனா வைரஸ் பாதிப்பு... மெஸ்ஸி, கார்டியோலா ரூ.8 கோடி நன்கொடை

கட்டலோனியா : கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் கடுமையான பாதிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில், இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் இதுவரை கொரோனா பாதிப்பிற்கு 2,696 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Lionel Messi, Pep Guardiola Donate 1 million Euros towards Spains Fight against Coronavirus

கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் போன்றவற்றை செய்துதரும் வகையில் நன்கொடைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் பெப் கார்டியோலோ ஆகியோர் இந்திய ரூபாய் மதிப்பில் 7.91 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உலகளவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகமே ஸ்தம்பித்துள்ள இந்த நிலையில், பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டுமே எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்தியாவிலும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்துள்ள நாடுகளில் சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக அதிகளவில் உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடு ஸ்பெயின். இங்கு விதிமுறைகள் தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளன. இங்கு இதுவரை 2,696 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரரும் தற்போதைய மேனேஜருமான கார்டியோலா ஆகியோர் 1 மில்லியன் யூரோக்களை கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக நன்கொடையாக அளித்துள்ளனர். இதில் மெஸ்ஸி தன்னுடைய நன்கொடையை இரண்டாக பிரித்து, பார்சிலோனாவின் மருத்துவமனை மற்றும் தன்னுடைய ஊரின் மருத்துவ மையத்திற்கு அளித்துள்ளார்.

இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக நன்கொடை வசூலித்துவரும் ஏஞ்சல் சோலர் டேனியல் பவுண்டேஷனுக்கு கார்டியோலா தனது 8 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். இதேபோல பிபா உலக சுகாதார நிறுவனத்திற்கு 10 மில்லியன் டாலர் நிதியை கொரோனா பாதிப்பிற்காக வழங்கியுள்ளது.

Story first published: Wednesday, March 25, 2020, 11:28 [IST]
Other articles published on Mar 25, 2020
English summary
Coronavirus threat : Lionel Messi, Pep Guardiola donate 1 million euros
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+