Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லியோனல் மெஸ்ஸி பிரம்மாண்ட சாதனை.. ஹாட்ரிக் கோல் ரெக்கார்டு.. அல்ஜீரியாவை வீழ்த்திய அர்ஜென்டினா

கான்சாஸ் சிட்டி: உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் 6வது முறையாகக் களமிறங்கிய முதல் ஆண் வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்த அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி, அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி 3 - 0 என அல்ஜீரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற குரூப் ஜே பிரிவு லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் அல்ஜீரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார். அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் கொடுத்த பாஸை பெற்றுக்கொண்ட அவர், இடது காலால் பந்தை லாவகமாக வளைத்து அல்ஜீரியா கோல்கீப்பர் லூகா ஜிடேனை ஏமாற்றி கோல் போஸ்ட்டிற்குள் அனுப்பினார்.

Lionel Messi Scores Historic Hat-Trick in 6th World Cup Argentina beat Algeria 3 - 0 in FIFA World Cup 2026

தொடர்ந்து 60வது நிமிடத்தில் தனது 2வது கோலை அடித்த மெஸ்ஸி, 77வது நிமிடத்தில் தனது 3வது கோலை அடித்து உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார். இந்த ஹாட்ரிக் கோல்கள் மூலம் உலகக் கோப்பை அரங்கில் மெஸ்ஸியின் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயின் (16 கோல்கள்) உலக சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார். முன்னதாக 14 கோல்களுடன் இருந்த எம்பாப்பே மற்றும் கெர்ட் முல்லர், 15 கோல்களுடன் இருந்த பிரேசிலின் ரொனால்டோ ஆகியோரை மெஸ்ஸி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இப்போட்டியில் அடித்த முதல் கோல் மூலம், உலகக் கோப்பையில் பெனால்டி பாக்ஸிற்கு வெளியிலிருந்து 5 கோல்கள் அடித்த பிரேசில் ஜாம்பவான் ரிவெலினோவின் சாதனையும் மெஸ்ஸி சமன் செய்தார். மேலும், அர்ஜென்டினா அணிக்காக உலகக் கோப்பையில் கோல் அடித்த மிகக் குறைந்த வயது மற்றும் மிக மூத்த வயது வீரர் என்ற இரட்டைப் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

FIFA: 4 கோல் அடித்து ஈராக்கை ஓடவிட்ட நார்வே.. எர்லிங் ஹாலண்ட் 2 கோல் அடித்து மாஸ் சாதனை

FIFA: 4 கோல் அடித்து ஈராக்கை ஓடவிட்ட நார்வே.. எர்லிங் ஹாலண்ட் 2 கோல் அடித்து மாஸ் சாதனை

தனது 19வது வயதில் 2006 உலகக் கோப்பையில் முதல் கோல் அடித்த மெஸ்ஸி, 20 ஆண்டுகள் கடந்து தனது 39வது வயதிலும் 6வது உலகக் கோப்பை தொடரில் விளையாடி தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்து வருவது உலக கால்பந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2022 உலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடப்பு உலகக் கோப்பையிலும் அர்ஜென்டினாவை கம்பீரமாக வழிநடத்தி வருகிறார்.

Story first published: Wednesday, June 17, 2026, 8:50 [IST]
Other articles published on Jun 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+