Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் கிளம்புறேன்.. பயமுறுத்திய மெஸ்ஸி.. கண்ணீர் விட்ட குடும்பம்.. அதிர்ந்த ரசிகர்கள்!

பார்சிலோனா : 2020இல் கால்பந்து ரசிகர்களால் மறக்க முடியாத சம்பவம் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா கால்பந்து கிளப்பை விட்டு விலக உள்ளதாக கூறியது தான்.

பார்சிலோனா கிளப் தான் மெஸ்ஸியை சிறிய வயதில் அடையாளம் கண்டு அவருக்கு பயிற்சி அளித்து அவரை வளர்த்தது.

அவர் பல ஆண்டுகளாக பார்சிலோனா அணியில் தான் ஆடி வருகிறார். ஆனால், புதிய நிர்வாகம் மீது பல விஷயங்களில் அதிருப்தியில் இருந்தார் மெஸ்ஸி.

Messi created huge buzz in 2020

பார்சிலோனா நிர்வாகம் குறித்து பகிரங்கமாக அவர் பேசி வந்த நிலையில், திடீரென தான் பார்சிலோனா அணியை விட்டு விலக இருப்பதாக அறிவித்தார். அது கால்பந்து உலகை அதிர வைத்தது.

பார்சிலோனா ரசிகர்கள் இதை நம்ப முடியாமல் தவித்தனர். எப்படியாவது அவர் அதே அணியில் நீடிக்க மாட்டாரா? என எதிர்பார்த்தனர். கிளப் அணிகளில் பார்சிலோனா அணியை தாண்டி வேறு எந்த அணியிலும் மெஸ்ஸியை யோசித்து பார்க்க முடியாது என அவர்கள் புலம்பினர்.

மறுபுறம் மெஸ்ஸி தன் விலகல் முடிவை குடும்பத்தினரிடம் கூறி இருக்கிறார். அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

இப்படி ஒரேடியாக பலரும் பார்சிலோனா அணியை விட்டு விலக வேண்டாம் என கூறவும் மெஸ்ஸி தன் முடிவை பின் வாங்கினார். அது மட்டுமின்றி, பார்சிலோனா அணி அவரை அணியில் நீடிக்க வைக்க சில சட்ட சிக்கல்களை உருவாக்கியது. அவர் பாதி சீசனில் கிளப்பை விட்டு விலக முடியாது என கூறியது.

தற்போது மெஸ்ஸி கருத்து வேறுபாடு இருந்தாலும் பார்சிலோனா அணியிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறார்.

Story first published: Thursday, December 17, 2020, 19:35 [IST]
Other articles published on Dec 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+