19 புது வீரர்கள்... புது கோச்... கலக்கலான பின்னணியில் ஐஎஸ்எல்லில் இறங்கும் மும்பை சிட்டி!
கோவா : ஐஎஸ்எல் 2020 -21 சீசனில் 19 புதிய வீரர்கள் மற்றும் புதிய கோச்சுடன் களமிறங்கியுள்ள மும்பை சிட்டி எஃப்சி அணி இந்த ஆண்டில் கோப்பையை கைப்பற்றும் மும்முரத்தில் உள்ளது.
கடந்த ஆண்டில் எஃப்சி கோவா அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஸ்பானிஷ் கோச் செர்ஜியோ லோபெரா தற்போது மும்பை அணியில் இணைந்துள்ளது அந்த அணிக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இந்நிலையில் ஐஎஸ்எல்லின் 2வது போட்டியில் நாளை மும்பை சிட்டி எஃப்சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் மோதவுள்ளன.

கோவாவில் தொடர்
இந்திய சூப்பர் லீக் 2020-21 கால்பந்தாட்ட சீசன் இன்று முதல் துவங்கவுள்ளது. கோவாவின் பல மைதானங்களில் இந்த தொடர் முழுமையாக நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஒளிப்பரப்பவுள்ளது. உலகெங்கலும் 82 நாடுகளில் 5 ஒளிபரப்பு நிறுவனங்கள் இந்த தொடரை ஒளிபரப்ப உள்ளன.

களத்தில் இறங்கிய மும்பை சிட்டி
இந்த ஐஎஸ்எல் சீசன் 7ல் 11 அணிகள் பங்கேற்று 115 போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத மும்பை சிட்டி எஃப்சி அணி, இந்த முறை கோப்பையை கைப்பற்ற மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளது.

புதிய கோச்
அந்த அணியில் 19 புதிய வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். மேலும் ஸ்பானிஷ் கோச் செர்ஜியோ லோபரா அணியை வழிநடத்தவுள்ளார். கடந்த சீசனில் எஃப்சி கோவா அணியின் வெற்றிக்கு இவர் காரணமாக இருந்த நிலையில் தற்போது மும்பை அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பை வெல்ல காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிரமாக தயாராகும் வீரர்கள்
இந்நிலையில் மும்பை சிட்டி அணி நாளை கோவாவின் திலக் மைதான் ஸ்டேடியத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியுடன் மோதவுள்ளது. இதற்கென அணி வீரர்கள் புதிய பயிற்சியாளரின் கீழ் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றனர்.

பயிற்சியாளர் அறிவுறுத்தல்
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் லோபெரா, கால்பந்தாட்டத்தில் அட்டாக்கிங் மிகவும் முககியமானது என்று தெரிவித்துள்ளார். ஆயினும் அட்டாக் மட்டுமின்றி டிஃபன்சும் முக்கியமானது என்றும் இரண்டையும் சமமாக செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications