For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெய்மர் அடித்த அந்த ஒரு கோல்.. பிரேசிலுக்காக 77 கோல்கள்.. பீலே சாதனை சமன் செய்து அதிரடி!

தோஹா: பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜாம்பவான் பீலே சாதனையை, நட்சத்திர வீரர் நெய்மர் சமன் செய்துள்ளார்.

கிரிக்கெட்டுக்கு எப்படி ஆஸ்திரேலியாவோ, கால்பந்து விளையாட்டுக்கு பிரேசில் அப்படி என்று மீம்ஸ் வெளியிடும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வந்த அணி பிரேசில்.

ஆனால் நடப்பு உலகக்கோப்பையில் குரோஷியா அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் தோல்வியை சந்தித்துள்ளது.

பிரேசில் தோல்வி

பிரேசில் தோல்வி

5 முறை உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணி, 6வது முறையாக வெல்ல வேண்டும் என்ற நோக்குடன் உலகக்கோப்பைத் தொடரில் களமிறங்கியது. ஆனால் பிரேசில் வீரர்களின் கனவு நாக் அவுட் சுற்றில் இந்திய அணி எப்படி விளையாடுமோ, அப்படி விளையாடி தோல்வியை சந்தித்துள்ளது.

நெய்மர் சாதனை

நெய்மர் சாதனை

இந்தப் போட்டியில் பிரேசில் அணி தோல்வியை சந்தித்தாலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கால்பந்து ஜாம்பவான் பீலே சாதனையை சமன் செய்துள்ளார். பிரேசில் கால்பந்து ஜாம்பவான் 1958, 1962 மற்றும் 1970 என மூன்று முறை பிரேசில் அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்தவர் பீலே. இவர் பிரேசில் அணிக்காக 77 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

பீலே சாதனை சமன்

பீலே சாதனை சமன்

இந்த சாதனையை நட்சத்திர வீரர் நெய்மர் சமன் செய்துள்ளார். குரோஷியா அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் கூடுதல் நேரத்தில் கிடைத்த வாய்ப்பில் யாரும் கணக்கிட முடியாத வகையில், 5 வீரர்களை கடந்து அசாத்திய கோலை நெய்மர் அடித்தார். இதன் மூலம் பிரேசில் அணிக்காக 77வது கோலை அடித்தார்.

விமர்சனங்களுக்கு பதிலடி

விமர்சனங்களுக்கு பதிலடி

முக்கியமான போட்டிகளில் நெய்மர் சரியாக விளையாட மாட்டார் என்ற விமர்சனங்கள் அதிகமாக இருந்து வந்தன. இந்த கோல் மூலம் அனைத்து விமர்சனங்களுக்கும் நெய்மர் பதிலடி கொடுத்துள்ளார். இருப்பினும், பிரேசில் அணியின் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல் 2002ம் ஆண்டுக்கு பின் காலிறுதி சுற்றுடன் 4வது முறையாக பிரேசில் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 10, 2022, 2:20 [IST]
Other articles published on Dec 10, 2022
English summary
Neymar has equaled legend Pele's record for most goals scored for Brazil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+