Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடரும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் வெற்றிப்பயணம்... ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி அதிரடி!

கோவா : கோவாவின் திலக் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 17வது போட்டியில் 2க்கு 0 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி, எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி கொண்டுள்ளது.

இந்த வெற்றியை அடுத்து ஐஎஸ்எல் 2020-21 புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி நிலை கொண்டுள்ளது.

இந்த தொடரில் புதிதாக களமிறங்கியுள்ள எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்திலேயே தொடர்ந்து வருகிறது.

2வது இடத்தில் நார்த்ஈஸ்ட் அணி

2வது இடத்தில் நார்த்ஈஸ்ட் அணி

ஐஎஸ்எல் 2020-21 தொடர் துவங்கி பரபரப்பான ஆட்டங்களை ரசிகர்களுக்கு தந்து வருகிறது. இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 9 புள்ளிகளுடன் மோஹுன் பகன் அணி முதலிடத்தில் உள்ள நிலையில் 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

நார்த்ஈஸ்ட் அணி வெற்றி

நார்த்ஈஸ்ட் அணி வெற்றி

நேற்றைய ஐஎஸ்எல் தொடரின் 17வது போட்டியில் நார்த்ஈஸ்ட் மற்றும் எஸ்சி ஈஸ்ட்பெங்கால் அணிகள் மோதின. கோவாவின் திலக் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 2க்கு 0 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் ஈஸ்ட் பெங்கால் அணி தன்னுடைய நேரடியான 3வது தோல்வியை சந்தித்துள்ளது.

தடுமாறிய ஈஸ்ட்பெங்கால்

தடுமாறிய ஈஸ்ட்பெங்கால்

நார்த்ஈஸ்ட் அணியின் சுர்சந்திரா சிங் மற்றும் ராச்ஹார்செலா ஆகியோரின் சிறப்பான கோல்களால் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனிடையே ஈஸ்ட்பெங்கால் அணி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும் கோல் எதையும் போட முடியாமல் தடுமாறியது.

கைகொடுக்காத மாற்றம்

கைகொடுக்காத மாற்றம்

கடந்த மும்பை சிட்டி எப்சி அணிக்கு எதிரான தோல்வியை அடுத்து அணியில் முக்கியமான மாற்றங்களை ஈஸ்ட் பெங்கால் அணியின் கோச் ராபி பௌலர் மேற்கொண்டிருந்தார். டேனியல் பாக்ஸிற்கு பதிலாக சேனாஜ் சிங் களமிறக்கப்பட்டிருந்தார். ஆயினும் அந்த அணியால் தன்னுடைய வெற்றிக் கணக்கை பதிவு செய்ய முடியவில்லை.

Story first published: Sunday, December 6, 2020, 14:52 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+