Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?

படோர்டா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 72வது போட்டி படோர்டாவின் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இதில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி, ஏடிகே மோஹுன் பகன் அணியுடன் மோதவுள்ளது.

இரு அணிகளும் முறையே ஐஎஸ்எல் 2020-21 புள்ளிகள் பட்டியலில் 5வது மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ள நிலையில் இன்றைய போட்டி கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

72வது போட்டி

72வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 72வது போட்டி இன்றைய தினம் கோவாவின் படோர்டாவில் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணி மற்றும் 2வது இடத்தில் உள்ள ஏடிகே மோஹுன் பகன் அணிகள் மோதவுள்ளன.

3 போட்டிகளில் மட்டுமே வெற்றி

3 போட்டிகளில் மட்டுமே வெற்றி

இந்த தொடர் துவங்கியதில் இருந்தே நிலையற்ற போட்டிகளை அளித்து வருகிறது நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி. 12 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி கொண்டுள்ளது. மேலும் 3 போட்டிகளில் தோல்வியும் 6 போட்டிகளை டிராவும் செய்து 5வது இடத்தில் உள்ளது. 13 புள்ளிகளை தன்னிடம் கொண்டுள்ளது.

24 புள்ளிகளுடன் சிறப்பு

24 புள்ளிகளுடன் சிறப்பு

இதேபோல ஏடிகே மோஹுன் பகன் அணி 12 போட்டிகளில் விளையாடி 24 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த சென்னையின் எப்சி அணியுடனான போட்டியில் 1க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த போட்டியில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகள் மோதிய நிலையில் 2க்கு 0 என்ற கணக்கில் ஏடிகே மோஹுன் பகன் அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை வெற்றி கொண்டது.

வெற்றி குறித்த எதிர்பார்ப்பு

வெற்றி குறித்த எதிர்பார்ப்பு

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள இந்த போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. படோர்டா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு வழக்கம் போல இந்த போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஏசியாநெட் ப்ளஸ் டிவி சேனல்களில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

Story first published: Tuesday, January 26, 2021, 18:03 [IST]
Other articles published on Jan 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+